உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438

இளங்குமரனார் தமிழ்வளம்

5

காலனாக இருந்த காரியின் மைந்தர்களைக் காலால் மிதித்து வஞ்சந் தீர்த்துக் கொள்ள வருவது போல் அதன் ஆற்றல் வாய்ந்த நடை உள்ளது! ஆனால், நின்ற சிறுவர்களோ, அது வரைக்கும் அழுத அழுகையை விடுத்து, யானையை விருப்பொடு வேடிக்கை பார்க்கின்றனர்! எத்தகைய கொடுமை!

நிறுத்து

களிறு கொலைக்களத்தின் டையே யே குறுகுகின்றது. கோவேந்தன் ‘செலுத்து' என்று ஏவ வேண்டும். ஆனால் ‘நிறுத்து' என்னும் ஒரு ‘குரல்’ ஓங்கி எழுகின்றது. அவ்வொலி கோக்கிள்ளி வாயில் இருந்து வரவில்லை. கோவூர் கிழார் என்னும் அருட் புலவர் அருந்தமிழ் வாயில் இருந்து வெளி வந்தது! சொல்லொடு பொருள் உடன் வருவது போல, ஒலி யுடன் கோவூராரும் முன் வந்து நின்றார்.

L

அருட்புலவர்

பற்றி எரியும் வீட்டுள் புகுந்து பொருளைப் பாதுகாக்கும் ஊக்கம் எல்லார்க்கும் ஏற்படுவது இல்லை. உயிரை ஒரு பொருட் டாக எண்ணாத உரம் உடையவர்களுக்கே இயலும். அதனினும் உரம் உடையவர்களே சீற்றமிக்க வேந்தன் முன் நிற்கமுடியும். அதிலும் அவன் கொடுமை செய்யத் துணிந்து நிற்கும் பொழுதில் திடுமெனப் புகுந்து ‘நிறுத்து' என்பது, நெருப்புடன் விளையாடுவதாக அல்லாமல் வேறு எவ்வாறு இருக்க முடியும்? அந்த விளையாட்டுக்கும் துணிந்தவர் அருளாளர் கோவூரார். பரம்பரைப் பெருமை

“ஏன்?” என்று கேட்டான் யானையை ஏவ நின்ற வேந்தன்.

"வேந்தனே! உன் விருப்பம் போல் செய்! தடையற்றுச் செய். ஆனால், நான் சொல்லப் போகும் உரையைக் கேட்டு விட்டுச் செய்" என்றார். என்ன அருமையான தொடக்கம்! தாண்டு செய்ய நினைவார்க்கு இத்தகைய பேச்சுத் திறம் அல்லவோ வேண்டும்! தொடக்கம் மட்டும் தானா நயம்? சுவைக் கட்டியை எந்தப் பக்கத்தில் கடித்தால் தான் என்ன?

66

6

‘அரசே! ஒரு புறாவை வெருட்டிக் கொண்டு வந்தது ஒரு பருந்து; அஞ்சிய புறாவோ புவியாளும் வேந்தனை அடைக் கலமாக அடைந்தது. எளிய புறாவே என்று வேந்தன் புறக் று கணித்தானா? வல்வாய்ப் பருந்தின் வாய்ப் பொருளாக விட்டு விட்டானா காவலன்? இல்லை! புறாவுக்கு அடைக்கலம் அளித் தான். பருந்துக்கும் பரிவு காட்டினான். எப்படி? புறாவின்