பண்டைத் தமிழ் மன்றங்கள்
பழையன் மறைவு
443
அறிவு நூலில் மிகுதியாகக் கணைக்காலன் ஈடுபட்டிருந்த காலத்தில் கோச்செங்கட் சோழன் என்னும் செங்கணான் சேரநாட்டின்மேல் படையெடுத்தான். படை எடுப்பைக் கேட்ட வுடன் புலிபோல் வெளியேறினான் சேரன். வீரர்களும் ஒரு வரை முந்தி ஒருவர் வெளியேறினர். படையெடுப்பு நேருமென எண்ணாமல் அறிவுக் களத்தில் இருந்து நேரிடையாக அமர்க் களம் சென்றவன் சேரன்! அவன் வீரர்களும் போரை நோக்கி யிருந்தார் அல்லர். எதிர்த்து நின்றவனோ எளியன் அல்லன்! பெருவீரன்! அவன் படைத்தலைவன் பழையன் என்பவன், மாபெரும் வீரன். சேரன் தன் படைகளை நான்கு பிரிவு படுத்தி நன்னன், அத்தி, கங்கன் கட்டி, புன்றுறை என்னும் நால்வரையும் பிரிவுத் தலைவர்கள் ஆக்கினார். போர், கழுமலம் என்னும் இடத்தில் நடை பெற்றது. தனித்தலைவன் சேரன்! துணைத் தலைவர் நால்வர் ! பழையனோ ஒரே தலைவன்! சேரன் படை வீரர் சூழ்ந்து நின்று தாக்கினர்; பழையன் வீழ்ந்து பட்டான்! பொழுதும் விழுந்தது; இருள் சூழ்ந்தது; வீரர்கள் ஆரவாரம் விழுந்தது; முதல் நாள் போர் பழையன் முடிவோடு முடிந்தது. களக்காட்சி
செங்கட் சோழன கண்ணை, மேலும் சிவப்பு ஆக்கின 'பழையன்' இறப்புக் கவலையும், அக்கவலையால் உண்டாய உறக்கம் இல்லாமையும்! விடிந்தது! 'சேரர் மடிந்தனர்’ என்று சோழன் தன் கால்களை எடுத்து வைத்தான் களம் நோக்கி அவன் கண்ணினும் சிவந்து விட்டது களம்! ஒரே குருதிக்காடு! காலையிலே பட்டு வீழ்ந்தவர் இரத்தத்தை மிதித்து உழக்கியது களிறு! மாலையிலே கிளம்பியது புழுதி! என்ன புழுதி! பவழப் புழுதி!
66
66
இரத்தம் பெருக் கெடுத்தோடியது செங்குளத்தில் இருந்து நீர் வடிவது போல! உடைந்த முரசமே மடை!
66
“கருநிறக் காகம் செந்நிறம் கொண்டு விட்டது. போர்க் களம் தந்த புகழ்ப் பரிசு அது!
"வெட்டப்பட்டன வீரர் கால்கள்! அவை இரத்த வெள் ளத்தில் நகர்ந்தன சுறா மீன்களைப் போல,
66
‘துதிக்கைகள் வெட்டப்பட்டுப் புரண்டன; இடியுண்ட பாம்பு போல. கொற்றக் குடைமேல் விழுகின்றது அற்ற துதிக்கை, வெண்ணிலவைத் தழுவும் பாம்பு போல.