444
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
'வெட்டுண்ட துதிக்கையில் இருந்து சொட்டுகின்றது குருதி, பவழம் நிறைந்த பையின் மூட்டு வாய் கிழிந்தது போல. "எழுகின்றது கழுகு; வாயிலே இருக்கின்றது தசை; அடித்துப் பறக்கின்றது சிறகை; மத்தளம் அடிப்பவனை ஒப்பாக இருக்கின்றது காட்சி.
66
'காற்றிலே ‘தூம் தூம்’ என்று விழும் பனங்காய் போல வீழ்கின்றது தலை. போர்க்காற்று பேய்க் காற்று அல்லவா!
"கேடயத்தோடு அற்றது கை; அதனைப் பற்றுகிறது நரி; கவ்விக் கொண்ட கொண்டது வாயில்! கண்ணாடி காண்பவர்களை நினைவூட்டுகின்றது அது.
"கோடைக் காற்றுக்கு ஆற்றாத் தோகை மயில் போல அலறி ஓடி வருகின்றனர் மங்கைமார், தம் கணவர் இறந்துபட்ட இடம் நோக்கி.
6
"களிறு எற்றித் தள்ளுகிறது கொற்றக் குடையை; புரள் கிறது, பசு மிதித்த காளான் போல!
தான்
கணைக்காலன் இதற்குமுன் கவிதைகளிலே தளை’யைக் கண்டதுண்டு! இப்பொழுது தன் கைகளிலே ‘தளை’யைக் காணுகின்றான். சோழ வீரர்கள் சேரவேந்தனை ழுத்துச் செல்கின்றனர். ஒரே ஓர் 'எரிமலை' மட்டும் புகைந்து கொண்டு நின்றது. என்ன இருந்தாலும் சேரன் தம் உயிரன்ன மாணவன் அல்லவா!
சிறையில் சேரன்
சேரன் கால்கள் நடந்தன. எண்ணம் தாவித் தாவி எங் கெங்கோ அலைந்தது. அவன் இத்தகைய ஒரு நிலைமையை எண்ணிப் பார்த்திருக்கவே இயலாது. போரில் வெல்லலாம், அன்றித் தோற்கலாம். அது வீரர்க்கு இயல்பே. கைத் தளையுடன் பகைவன் சிறைக்கண் சிக்கிச் சிறுமையுறும் கொடுமையை நினைக்கத்தான் அவன் நெஞ்சம் நெக்குருகியது. போர்க் களத்தில் புண்பட்டு இறந்திருந்தால் புகழ் வாழ்வு வாழ்ந்ததாகக் கருதிப் புன்முறுவல் பூத்திருப்பான். அறிவு நூல் கற்ற அவன், செடியில் இருந்து பூ ஒன்று உதிர்வது போலத் தன் உடலில் இருந்து உயிரை உகுத்திருப்பான். ஆனால், “மாறாப் பழியாக மாற்றான் சிறைக்கண் கிடக்க நேர்வது மன்னவன் நிலைமைக்குத் தகுமா?” என்னும் சிந்தனைச் சிக்கல் போராடிக் கொண்டே இருந்தது. அந்நிலையில், உறையூர்க்கு மேல் பால் இருந்த