8. வீடு
வாழ்வு நோக்கம்
'வாழ்க்கை, வாழ்வதற்கே' என்னும் பேச்சு பல இடங் களில் எழுகின்றது. அது கலை, கலைக்காகவே' என்னும்
L
முழக்கத்தில் இருந்து எழுந்ததாகும்.
-
‘வாழ்க்கை வாழ்வதற்கே என்பது மிகப் போற்றத்தக்க விரும்பத்தக்க - ஒன்றே. அரிதினும் அரிதாகக் கிடைத்த மாந்தர்ப் பிறவியையே வாழ்வுக்குப் பயன்படுத்தாத ஒருவன் பிறகு எதைத் தான் வாழ்வுக்குப் பயன்படுத்துவான்? ஆனால், ‘வாழ்வதற்கே' என்பதில் அமைந்துள்ள வாழ்வு எவருடையது? சொல்பவரைப் பற்றியதாக மட்டும் இருந்தால் அதற்கு மானிடப் பிறவிதான் வேண்டும் என்பது இல்லை. எல்லா உயிர்களும் தம் வாழ்வையே, தனி வாழ்வையே - நாடித்திரிகின்றன. அவற்றிற்கும், ஆறாம் அறிவாகிய பகுத்தறிவும், பிறர் துயரும், பிறர் நலமும் அறியும் மன உணர்வும் உடைய மாந்தர்க்கும் வாழ்வு பற்றிய நோக்கம் ஒன்றா கவே இருக்குமானால் அது வாழ்வு ஆகாது.
வாழ்வாங்கு வாழ்தல்
மனிதன் ‘வாழ்வாங்கு வாழ' விரும்புபவர் வள்ளுவர். அதற்கு வழி வகுத்துக் காட்டியவரும் அவர்:
“தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
(குறள், 46)
என இல்வாழ்வினரால் காக்கத் தக்கவர் இவர் என எண்ணி உரைத்தார்.
'இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
- (குறள், 41)