உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450

இளங்குமரனார் தமிழ்வளம்

5

66

'துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை'

(குறள், 42)

என இல்வாழ்வினர் எவர்க்குத் துணையாதல் வேண்டும் என இனிது உரைத்தார்.

66

'அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி”

(குறள், 226)

என்றும்,

66

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

وو

(குறள், 322)

என்றும் அறவாழ்வை அறுதியிட்டு உரைத்தார். இவற்றைப் பேணி வாழ்பவர் வையத்துள் வாழ்ந்தாலும் கூட வானுறையும் தெய்வங்களுடன் வாழும் தெய்வ வாழ்வினராகக் கருதப்படுவார் என்று தெளிவு காட்டியுள்ளார். இத்தகைய உயரிய வாழ்வைக் கருதாமல் தம் வாழ்வையே கருதுபவர் மனிதர் அல்லர். அவர் மனித உருவில் இருக்கிறார் என்று கூறும் அளவே தகும். அவர், "வேடிக்கை மனிதர்' என்பது பாரதியார் கருத்து.

“தேடிச் சோறு நிதந் தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பம் மிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?”

என்று பராசக்தியினிடம் வரம் வேண்டும் பகுதியால் பாரதியார் கருத்துத் தெளிவாகும்.

உள்ளங்கள் பல

தன்னையே கருதும் அளவுடன் நில்லாமல், தன் குடும்பம்,