454
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
‘பசிப்பிணி மருத்துவன்' என்று பட்டம் வழங்கி அல்லவா பாராட்டுகின்றான்? வள்ளுவர் தாம் வறிதே விட்டொழிக்கக் கூடியவரா? பசியென்னும் தீப்பிணி என்று குடரை நெருக்கிப் பிடித்து எரிக்கும் பசியைச் சுருக்கி யரைத்து விட்டாரே அவர். இத்தகைய பசி பற்றவும், சுற்றவும் கொண்ட சித்திரனார், வீட் டை விட்டு வெளியேறி விடலாம். வீடே தஞ்சமான மனைவியார் என் செய்வார்? அவரை நோக்கிப் புலவர் சொல் கிறார் குமணன் தந்த பரிசில் கொண்டு வந்த களிப்பில் சொல்கிறார் -வீட்டுக்குள் நுழையாமல் முற்றத்தில் நின்று கொண்டே சொல்கிறார்.
மனைவியிடம் மொழிந்த மணிமொழி
‘என் இனிய மனைவியே! என் இனிய மனைவியே! இங்கே வா! இதோ பார்! இப்பெருஞ் செல்வத்தைக் காண்! முதிரத்து வள்ளல் குமணன் தந்த கொடை இது!
“உன்னைத் தேடி வந்து அன்புறப் பழகுகிறார்களே, அவர் களுக்குக் கொடு.
"நீயே தேடிப்போய் அன்பாகப் பழகுகிறாயே, அவர் களுக்கும் கொடு.
“உற்றார் உறவினர் என்னும் பெயருடன் சுற்றி இருக்கிறதே ஒரு பெருங் கூட்டம்; அஃது உவக்கும் வண்ணம் அள்ளி அள்ளிக் கொடு.
“நம் பசியத்துயர் நோக்கி வலிய வந்து முன்னர் உதவி னார்களே, கைம்மாற்றாகவும் கடனாகவும் கனிவுடன் தந்தார் களே, அவர்களுக்கும் அளவின்றி நிரம்பக் கொடு.”
66
இன்னும் என்ன? இவர் தாம் என்பது இல்லாமல் எல்லார்க்கும் கொடு. என்னிடம் கேட்டே தர வேண்டும் என்று எண்ணாமல் கொடு. இன்னொன்று, இதற்கு முன் பட்ட வறுமைத் துயரைக் கருதியோ, மேல் வரும் வறுமைத் துயருக்கு அஞ்சியோ இப்பொருளை இறுக்கமாக வைத்துப் போற்றி நெடுங்காலம் வாழ்வோம் என்று எண்ணாமல் கொடு! எல் லார்க்கும் கொடு!
இவர் யார் ?
'சித்திரனார் புலவரா? புரவலரா? என்ற ஐயம் நமக்கு எழுப்பி விடுகின்றது. அவர் பாடும் போது ணையற்ற