உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் மன்றங்கள்

455

புலவராக இருக்கின்றார். கொடுக்கும் போது இணையற்ற புரவலராகத் திகழ்கின்றார். இரண்டும் இரு வேறு நிலைகளாக இருக்கலாம். ஆனால், இணைந்த பெருமை இருக்கிறதே அஃது எண்ணி எண்ணித் திளைக்கத் தக்கது.

பல்கலைக் கழகம்

'நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்’ என்று இந்நாளைய அறிவாளர்கள் பலர் கூறுவதைக் கேட்கிறோம். சித்திரனார் குடும்பம் ஒரு பல்கலைக் கழகமாகத் திகழ்ந்ததைச் சான்று காண்டு அறிகிறோம். சங்கத் தமிழ்ப் பாட்டைச் சித்திரனார் பாடுகின்றார். யாரிடம் பாடுகின்றார்? தம் மனைவியிடம் பாடுகின்றார். அம் மனைவி அவர் பாடற் பொருளை அறிந்து கொள்ள மாட்டா மடவாரா இருந்திருக்க முடியுமா? இருந் திருந்தால் பொருள் அற்று, இப்பாடலில் அவரை முன்னிலைப் படுத்திப் பாடியிருப்பாரா?

புலவர்க்கு

ணையான புலமையாட்டியாக அவர் இருந்தார் என்பது தெளிவு. அத்தகைய பெற்றோர் - சுற்றமும் சூழலும் பசிக்காமல் காக்கும் கடப்பாட்டில் தலை நிற்கும் சான்றோர் - குடும்பம், அறிவும் செறிவும், அன்பும் அறனும் பெற்றோங்கி இருக்கும் என்பதில் என்ன தடை?

தமிழ்ப்புலவர் வீட்டிலே தமிழ் மனைவி இருந்தார். அங்குத் தண்டமிழ் நங்கை கோவில் கொண்டாள். ஆகவே, அந் நங்கை ஈராயிரம் ஆண்டுகள் சென்றுங் கூட, புறநானூற்றில் இருந்து புன்னகை புரிகின்றாள்.

66

நின்னயந்த துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும்

பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும்

கடும்பின் கடும்பசி தீர யாழநின்

நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும்

5. இன்னோர்க் கென்னாது என்னொடும் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே, பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்

திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.

(புறம்: 163)