9. திண்ணை
.
"வேதம் நிறைந்த தமிழ் நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ் நாடு
என்பது நம் நாட்டுக்கு அமைந்த பாராட்டுரை மட்டும் அன்று; உண்மை உரையேயாம். இதனை நம் பண்டை நூல்கள் பரக்க வலியுறுத்தக் காணலாம்.
வீரம்
ஒரு நாடு வீரம் செறிந்ததாக அமைவதற்குரிய காரணங் கள் பலப்பல. தாய்மார் வீரமிக்கவர்களாக இருத்தலாம். நாட்டின் வீரம் வீட்டிலேயே பிறந்து வாழ்கின்றதே அன்றி வேறு வகையில் இல்லை. “இந்த வீரக்கள வெற்றி, “ஈட்டன் பள்ளி' தந்த விளையாட்டுக் கள வெற்றியே' என்று விம்மிதமுற்ற பெருந்தலைவர் ஒருவர் உரைத்தார். அந்த விளையாட்டுக்களம் தரும் வெற்றிக்கும், முதன்மையான வெற்றிதரும் களம் வீடே என்று கூற வேண்டும். பால் ஊட்டும் பொழுதே வீரத்தையும் சேர்த்து ஊட்டும் வீரத்தாய்மார் மிக்க நாடே வீரப் புதல்வரைப் பெற்று "வீரம் செறிந்த நாடு' என்னும் பேற்றை நல்கும்.
66
வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை
ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு
பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர் இந் நினைவகற் றாதீர்
பாரத நாடு பாருக்கெலாம் திலகம்
நீரதன் புதல்வர் இந் நினைவகற் றாதீர்!”
என்று சத்திரபதி சிவாசியின் வாக்காகப் பாடுகிறார் பாரதியார். இஃது எதனை விளக்குகிறது? தாய் தரும் வீரமே தலைப்பெரு வீரம் என்பதை விளக்குகிறது. பிள்ளையைப் பெறாதவள் 'மலடி' என்பது ஊர் வழக்கு! வீரனைப் பெறாமல் வேறெவனைப் பெற்றாலும் அவள் மலடியே என்பது உயர்ந்தோர் - உரவோர் - வழக்கு ஆகிறது. ஆகவே தாயின் வீரத்தால் பிறந்து வளர்ந்து