உணர்ச்சி நிலை
10. முல்லைப் பந்தல்
உணர்ச்சி மிக்கவர்கள் தங்கள் உணர்ச்சியை
னே
காட்டி விடுகிறார்கள். அவர்கள் வெளிக் காட்டும் உணர்ச்சி, காட்டாற்று வெள்ளம் போன்றது.
அறிவு மிக்கவர்கள் தங்கள்
உணர்ச்சியைப் பிறர்
அறியாமல் அடக்கி வைப்பதில் வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் அரிதில் காட்டும் உணர்ச்சி வெளிப்பாடு, கிணற்றுள் ஆழ்ந்து கிடக்கும் நீர் போன்றது.
உணர்ச்சியும் அறிவும் ஒருங்கு வளரப் பெற்றவர்கள் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி ஒருவாறு பக்குவமாக அளவுடன் வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் காட்டும் அளவமைந்த உணர்ச்சி வெளிப்பாடு, ஓடிவரும் நீரைத் தேக்கி வைத்து வேண்டியபோது மடைவழியாக வெளியேற்றும் ஏரி போன்றது. உணர்ச்சி வெளிப்பாடு
உணர்ச்சியை வெள்ளமாக வெளிப்படுத்துவது தனக்கும் கேடு, பிறருக்கும் கேடு. உணர்ச்சியை அறவே அடக்குவதும் ஒருநாள் இல்லாவிடினும் ஒருநாள். உள்வெதுப்பையும், வெளி வெதுப்பையும் உண்டாக்கத் தவறாது. ஆகவே அதுவும் கேடே. உணர்ச்சியை அளவே வெளிப்படுத்துவது வெளிப் படுத்துபவர்க்கு நன்மை பயப்பதுடன் கேட்பவர்க்கும் பயன் படும். ஆகவே, வேண்டிய அளவில் வெளிப்படுத்தும் உணர்ச்சி மதிக்கத்தக்கது.
ய
ப
இனி, வேண்டிய அளவில் வெளிப்படுத்தும் உணர்ச்சியையும் இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, வெளிப்படைச் சொல்லால் உணர்ச்சியை வெளிப்படுத்துவது. மற்றொன்று, குறிப்புச் சொல்லால் வெளிப்படுத்துவது. பின்னது அறிவும், உணர்வும் கைவரப் பெற்றிருப்பினும் அனைவருக்கும் இயல்வது அன்று; சிலருக்கே வாய்க்கும் தன்மையது. அத்திறம் வாய்ந்தவருள் கூடக் கலைமணம் கமழக் கவிதை நடையில் வெளிப்படுத்துவது ஒரு