பண்டைத் தமிழ் மன்றங்கள்
463
சிலர்க்கே இயலும், இத்தகைய அரிய கலையில், எளிதில் வெற்றி கண்ட வீரராகத் திகழ்ந்தார் ஒருவர். அவர் பெயர், கீரத்தனார். அவர் ஊர்ப்பெயர் குடவாயில். அவரைக் கீரத்தனார் என்று அழைத்தனர்.
பெருஞ்சாத்தன்
குடவாயில்
கீரத்தனாரின் உண்மை அன்புக்கு உரிமை படைத்தவனாக ஒருவன் இருந்தான், அவன் ஒல்லையூர் என்னும் ஊரைச் சேர்ந்தவன்; பெருஞ்சாத்தன் என்னும் பெயரினன். அவன் தந்தையார் உழவுத் தொழில் நடத்தினார் அந்நாளில் உழவுத் தொழில் செய்தவர்கள் ‘கிழார்' எனப் பெயர் பெற்றனர். நாம் காணும் கிழார் நாடறிந்த நல்லவராகவும், செல்வமும் கல்வியும் செழிக்கப் பெற்றவராகவும் இருந்தமையால் அவர் இயற் பெயரை விடுத்து 'ஒல்லையூர் கிழார்' என்றே அழைக்கப் பெற்றார். இன்றும் நாம், அவர் இயற் பெயரை அறியாமல் ஒல்லையூர் கிழார்' என்னும் சிறப்புப் பெயரை மட்டுமே அறிகிறோம். அவர் மைந்தனை இலக்கிய உலகம் ‘ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன்' என்று குறிப்பிடுகிறது.
அன்பு வரவேற்பு
கீரத்தனார் ஒல்லையூர் கிழாரை நன்கு அறிவார். அவரைப் பார்த்துப் பழகவும், பயன் பெறவும் பன்முறை போவார் ! காடும் மலையும் கடந்து செல்ல வேண்டிய நெடுந்தொலைவு உண்டு. கனிந்த அன்பு வரவேற்றால் காடும் மலையும் பொருட்டில்லை . கடலும் வானும் கூடப் பொருட்டு இல்லையே!
ஈரமும் வீரமும்
கிழாரைப் பார்க்கப் போகும்பொழுதெல்லாம் அவர் மைந்தனாம் சாத்தனையும் கீரத்தனார் காண்பது காண்பது உண்டு தந்தையாரின் ஈரத்தில் எவ்வளவு உள்ளம் தோய்ந்தாரோ, அந்த அளவினும் மைந்தன் காட்டிய வீரத்தில் மிகத் தோய்ந்தார் கீரத்தனார். காலம் செல்லச் செல்ல? ‘ஈரமும் வீரமும் இப்படி ஒன்றை ஒன்று வெற்றி கொள்ளும் விதத்தில் இவனிடம் விளையாடுகின்றனவே என்று கீரத்தனார் விம்மிதம் அடைந்ததும் உண்டு. அவற்றைத் தம் பைந்தமிழ் நாவால் பாராட்டுதலையும், பிறர் பாராட்டுதலைக் காது குளிரக் கேட்டலையும் பேரின்ப மாகக் கொண்டதும் உண்டு. புலவர்கள் பாட்டில் அமைந்து கிடக்கும் பொருள் வளர்ச்சி போலவே, பெருஞ் சாத்தனும் புகழ் பெருக நாளும் வளர்ந்தான்.
L
-