உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464

ஊரின் உறக்கம்

இளங்குமரனார் தமிழ்வளம் 5

வழக்கம்போல் கீரத்தனார் ஒரு நாள் ஒல்லையூர் நோக்கி வருகிறார். ஊரை நெருங்கும் போது அவரை அறியாமலே ஓர் அதிர்ச்சி ஏற்படுகின்றது; அயர்ச்சியும் உடன் ஏற்படுகின்றது. ஆரவாரமிக்க ஒல்லையூர் அமைதிக் கோலம் கொண்டு கிடக் கிறதே; வீரமுரசும், மணமுரசும், கொடைமுரசும் சேர முழங்கும் ஒல்லையூர் உறங்கிக் கிடக்கிறதே - ஏன்?

ஒல்லையூர்க்கு ஒளி விளக்காகத் திகழ்ந்த சாத்தன் ஒடுங்கி விட்டான். களப்போர்க்கு ஒடுங்காத உரவோனான அவன் காலன் வாய்ப்பட்டு ஒடுங்கி விட்டான். அவன் ஒடுங்குதலால் கவிஞர்களும், கலைஞர்களும், இளைஞர்களும், முதியவர்களும், காளையரும் கன்னியரும் அமைந்து விட்டனர், ஊரே என்றும் காணாத அமைதியை ஏற்றுக் கொண்டது.

ஒல்லையூர் முல்லை

வழிச் செல்பவர்களிடம் ஊரமைதிக்குரிய காரணத்தைக் கேட்டறிந்தார் கீரத்தனார். அவர் தலை சுற்றியது; தாங்க முடியாத் துயரம் கவிந்தது; இதயங் கலந்து பழகிய அவ்விணையற்ற வீரனது புதை குழிக்குச் சென்றார் புலவர். கண்ணீர் மாலை தொடுத்துக் கனிந்து சார்த்தினார். கலக்கம் கழியவில்லை; கண்ணீரும் யவில்லை. அந்நிலைமையில் முல்லைக் கொடி ஒன்று அரும்பும் பூவுமாய் அவர்க்குத் தோன்றியது. ‘அறிவில்லாத முல்லை' என்று கீரத்தனார் உள்ளம் வெதும்பியது.

அறியாக் கலைஞர்

அவ்வழியே கலைஞர் கூட்டம் ஒன்று வரக் கண்டார் கவிஞர். காளையர் கன்னியர், பாணர் பாடினியர் இணை இணையாக வ வந்தனர். "பாவம்! இவர்களும் என்னைப் போல் உண்மை உணராதவர்களாகத் தாம் வருகிறார்கள். ஒல்லையூர்க்கு வந்து வாடிக்கையாகச் செல்வ வளத்துடன் திரும்பிச் சென்றவர்கள்! வாடிக் கைகால் சோர்ந்து கலங்கும் என்னைப் போலவே இவர்களும் திரும்பிப் போவார்கள். பெருஞ்சாத்தன் இல்லை என்பதை இவர்கள் அறிவார்களா?" என்று எண்ணினார்.

முல்லைப் பல்லின் நகை

இத்தகைய ஒன்றையும் எண்ணாத முல்லைப் பூ இளந் தென்றலிலே அசைந்து ஆடியது. முல்லை தன் பல்லைக் காட்டிச்