பண்டைத் தமிழ் மன்றங்கள்
அன்றும் ! இன்றும்!
473
“உயர் வள்ளலாம் பாரியால் உலகம் வாழ்கிறது என்னும் அருமையை அறியாத வேந்தர்கள், படை கொண்டு பறம்பின் இடைமலை கடந்து ஏறிவந்த துண்டு. அவ்வேளைகளில், அச்சம் என்பதை அறவே அறியாத இம்மகளிர் முகில் தவழும் முகட்டில் அமைந்த மாடங்களில் நின்று கொண்டைகள் அசைய வரும் திரைகளை ஒன்று இரண்டு என்று வேடிக்கையாக எண்ணிப் பார்த்ததுண்டு. அவர்கள் தாம் இப்பொழுது உப்பு வண் ண்டி களைக் குப்பை மேட்டில் இருந்து எண்ணுகின்றனர் என்று கசிந்து அழுதார். நம்மையே நைந்துவிடச் செய்யும் இக் காட்சியைக் கண்ணாரக் கண்டார் கபிலர்; ஆகவே அவர் உள்ளம் வெடித்துவிடும் போல் இருந்தது. ஆனால் அருந்தமிழ் நங்கை அங்கே ஒரு புன்முறுவல் பூத்தாள். அவள் புன் முறுவலாம் தண்பனிநீர்க் கூட்டில் கலந்த செஞ்சாந்துக் கலவைப் பூச்சால் உள்ளம் வெடிப்பதற்குப் பதில் உணர்ச்சி மிக்க கவிதை ஒன்று வெளிவந்தது.
“தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக் கூம்பவிழ் முழுநெறி புரள்வரும்
ஏந்தெழில் மழைக்கண் இன்னகை மகளிர்
புல்மூசு கவலைய முள்மிடை வேலிப்
5. பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்
பீரை நாறிய சுரையிவர் மருங்கின் ஈத்திலைக் குப்பை ஏறி உமணர் உப்பொய் ஒழுகை எண்ணுப மாதோ நோகோ யானே தேய்கமா காலை 10. பயில்பூஞ் சோலை மயில்எழுந் தாலவும்
பயில்இருஞ் சிலம்பில் கலைபாய்ந் துகளவும் கலையும் கொள்ளா வாகப் பலவும் காலம் அன்றியும் மரம்பயம் பகரும் யாணர் அறாஅ வியன்மலை அற்றே 15. அண்ணல் நெடுவரை ஏறித் தந்தை பெரிய நறவில் கூர்வேல் பாரிய தருமை அறியார் போரெதிர்ந்து வந்த வலம்படு தானை வேந்தர்
பொலம்படைக் கலிமா எண்ணு வோரே.”
(புறம்: 116)