உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474

குறிஞ்சிக் கபிலர்

இளங்குமரனார் தமிழ்வளம் 5

கபிலர் பாடியனவற்றுள் கைக்கெட்டியுள்ள அகத்திணைப் பாடல்கள் 197. அவற்றுள் குறிஞ்சித் திணை பற்றியவையாக உள்ளவை 191 பாடல்கள். இதனால் குறிஞ்சிக் கபிலர் என்று சிறப்புப் பெயர் பெற்ற அவர் ‘குப்பையையும் பாடியுள்ளார். அதையும் குன்றத்தின் ஒருபகுதியில் வைத்துப் பொருத்திப் பாடியுள்ளார். குப்பை பெற்ற பேறே பேறு என அதனைப் போற்றவேண்டும்.

குப்பையில் குண்டுமணி

ஆன்ற அறிவும், அமைந்த பண்பும் உடைய ஒருவர் எவ ராலும் அறிந்து போற்றப் பெறாமல் இருந்தால் அவரைக் ‘குப்பையில் கிடக்கும் குண்டு மணி' (குண்டு - உருண்டை) என்று கூறுவது உலகியல் வழக்கு. ஆனால், குப்பையில் கிடைத்த குண்டு மணியாகக் கபிலர் பாடிய இப்பாடல் இருக்கிறது என்று நாம் உறுதியாகக் கொள்ளலாம்.

குப்பைக் கோழி

குப்பைக் கோழியார் என்றொரு புலவர் சங்க காலத்தில் வாழ்ந்தவர். அவர் குப்பைக் கோழியைத் தம் பாடலகத்துக் குறித்தமை கொண்டு அப்பெயர் பெற்றார். 'குப்பையிலே சண்டையிடும் கோழிகள் விலக்குவார் இன்றிப் போரிட்டுத் துன்புறும்; அவ் வண்ணமே யானும் விலக்குவார் இன்றித் துன்புறுகிறேன்" என்று ஒரு தலைவி கூறுவதாகப் புலவர் பாடினார். கபிலரின் உள்ளப் போராட்டமும் குப்பைக் கோழியின் போராட்டம் போலவே இருந்தது. அப்பொழுது தமிழ்த் தாய் தன் தகவு வாய்ந்த கவிச் செல்வன் மேல் கண்ணோட்டம் செலுத்திக் காத்தாள்.

இருந்தமிழ்

66

6

இருந்தமிழே உன்னால் இருந்தேன்; வானோர் விருந் தமிழ்தம் என்றாலும் வேண்டேன்' என்று ஒரு புலவர் உணர்ந்து பாடினார். இருந்தமிழால் அவர் உயிரோடு இருந்தது. உண்மை. அந்த இருந்தமிழே கபிலர் உயிரோடு இருக்க உதவியதும் உண்மை! அத்தமிழ் வாழ்க! அவர் புகழும் வாழ்க!" என்று வாழ்த்துவோம்.

66