உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளமும் வாழ்வும்

12. ஆற்றங் கரை

“உழவர் ஓதை மதகோதை

உடைநீர் ஓதை தண்பதங் கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப

நடந்தாய் வாழி காவேரி!”

(சிலம்பு. 7:4)

என்று வாழ்த்தினார் இளங்கோவடிகள். அதே ஆற்றின் வளத்தை,

66

“வான் பொய்ப்பினும், தான்பொய்யா

மலைத்தலைய கடற்காவிரி”

என்றும்,

"புனல்பரந்து பொன்கொழிக்கும் விளைவறா வியன்கழனி”

உடையது என்றும், இத்தகைய பெருவளம் மல்குதலால்,

"சோறுவாக்கிய கொழுங்கஞ்சி

ஆறுபோலப் பரந்தொழுகி”ச்

செல்லும் என்றும் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் தாம் இயற்றிய பட்டினப்பாலையில் பகர்கிறார். ஆற்றுப் படலம்

ஆறு பற்பல புலவர்களுக்கும் பற்பல காட்சிகளை வழங்கி யுள்ளன. கவி மன்னர் மன்னன் கம்பனுக்கு ஆறு வழங்கிய காட்சி ஒரு படலமாகவே உருவெடுத்தது! எங்கு? இராமகாதையின் முதற்பாடலில் இருந்தே! ஆற்றுப் படலம் பாடிய பின்னரே நாட்டுப் படலமும், நகரப் படலமும், அரசியற் படலமும் பாடுகிறான் கம்பன். அவன் நூலின் அமைப்பு முறையிலேயே ஆற்றங்கரையை நாகரிகத்தின் பிறப்பிடம் என்பதை அறிய