478
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
ஊ
இன்னொருவர் அவ்வளவுக்கு அறிவு, தெளிவு, ஆய்வு இல்லா தவர். ஆகவே 'இவர் சிறியர்' என்று இகழ்வதற்கும் இல்லை. அவர் பெரியர்’ ஆவதற்கு எப்படி ஊழ் காரணமோ, அவ்வாறே இவர் சிறியர், ஆவதற்கும் ஊழே காரணம். இத்தகைய உணர்வு ஏற்படும்போது பெரியோரை வியக்கவும், சிறியோரை இகழவும் முறை உண்டா? இல்லை! என்று முடிவு செய்தார். அவர் முடிவு ஒரு பாவின் சில அடிகளாக அமைந்தன. அவை,
“மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொரு திரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
மேலும் அவர் சிந்தனை வேலை செய்யத் தொடங்கியது. ஆறு பெருக்கெடுத்து ஓடுவது போல் எண்ணமும் பெருக் கெடுத்தது.
ஊரும் உறவும்
“உயிர்களெல்லாம் ஊழின் வட்டத்தில் சுழல் கின்றன என்னும் தெளிவு ஏற்படும்போது உயிர்களிலே ஏற்றத் தாழ்வு கருத என்ன இருக்கிறது? ‘இவர் உறவினர்; ‘அவர் அயலார்’ என்பது என்ன முறை கொண்டது? 'இவர் நண்பர்’ ‘அவர் பகைவர்’ என்று பிரிப்பதற்குத் தான் என்ன நியதி இருக்கிறது? இது என் ஊர்’; ‘அது அவர் ஊர்' என்று எண்ணுவது எவ்வாறு அறம் ஆகும்? நாம் இருக்கும் ஊரெல்லாம், எண்ணும் ஊரெல் லாம் நம் ஊரே! நாம் கண்டு அறிபவர், கேட்டு அறிபவர் அனைவரும் உறவினரே!
‘எல்லா ஊர்களும் நம் ஊர்; எல்லா மக்களும் நம் உறவினர்' என்னும் உயர்ந்த எண்ணம் உண்மையாக உண்டாகி விடும் பொழுது தீமை செய்பவர் யார்? நன்மை செய்பவர் யார்? எவரும் இலர்!
நன்றும் தீதும்
தீமை நமக்கு உண்டானால் அது நமக்கு நாமே செய்து கொண்டதாகத் தான் இருக்க வேண்டும்; நன்மை உண்டானால்