உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் மன்றங்கள்

479

அதுவும் நமக்கு நாமே செய்து கொண்டதாகத் தான் இருக்க வேண்டும். நாம் எந்தப் படியால் பிறருக்கு அளந்து கொடுக் கிறோமோ அந்தப் படியால்தான் நாம் அளந்து கொடுக்கப் பெறுகிறோம். நமக்குப் பிறர் என்ன செய்கிறார்? நாம் பிறருக்கு என்ன செய்தோமோ அதையே அவர் திருப்பி நமக்குச் செய் கிறார். விதை ஒன்றும் முளை ஒன்றுமாக இருக்குமா?

நமக்குத் தீமை செய்வார்க்கு, நாம் முன்னர் நன்மை செய் தோம் எனக் கருதிக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் நாம் செய்ததைத் தமக்கு நன்மை என்று கருதினார்களா? தீமை என்று கருதினார்களா? அவர்கள் கருதியதைப் பொறுத்தல்லவா பதில் செய்கிறார்கள்! ஒருவேளை அவர்கள் நன்மை என்று கருதிச் செய்வதே நமக்குத் தீமையாகத் தோன்றினாலும் தோன்றக் கூடுமே! இதனால் அன்றோ 'நன்றாற்றலுள்ளும் தவறுண்டு என்றார் செந்நாப் போதார்.

பாட்டின் பயன்

ாகி

தீமை நன்மைகளைப் பற்றிய இத்தெளிவு உண்ட விட்டால் நன்மைக்காக மகிழ்வதும், தீமைக்காக வருந்துவதும் ஏற்படா. பருவம் அறிந்து விதை தெளித்துப் பாத்தி கட்டி நீர்விட்டுக் களை பறித்துக் காவல் செய்தவன் பயன் கண்ட போது மகிழ என்ன இருக்கிறது? பட்ட பாட்டின் பயனை அடைகிறான்; அவ்வளவே. உழும் காலத்தில் ஊர்வழி போன வன், அறுக்கும் காலத்தில் ஆய பயன் இல்லையே என்றால் அவனும் அவன் செய்த வினையின் பயனை எண்ணினார். அருமை அருமையான மணி மொழிகளாக வெளிவந்தன.

66

"யாதும் ஊரே ; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;”

பொதுச் சொத்து

நோவும், நோவின்மையும் தாமே வருவன என்றால், நோவில் எல்லாம் தலையாய நோவு என மக்களால் கருதப் பெறும் சாவு எத்தகையது? என்று கருதத் தொடங்கினார். அக்கருத்தும் பெருகி வளர்ந்தது.

சாவு என்பது ஒருவருக்கு ஏற்பட்டதா? ஓர் உயிருக்கு மட்டும் ஏற்பட்டதா? ஒரு நாட்டளவில் கட்டுண்டதா? ஒரு கால அளவில் அமைவதா? இல்லவே இல்லை. உலகந் தோன்றிய