உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

43

ஓடுவது போல யான் உன்னை நோக்கி வந்தேன்; புலவர்களுக்குப் புகலிடமாகிய நீ நிலைபெற்று வாழ்வாயாக. நீ இல்லாமல் வெறுமையாகும் உலகில் புலவர்கள் இல்லாமல் போவாராக என்றும் கூறுகிறார்.

வள்ளல் ஆய்வேளைப் பொதியில் சென்று காண்கிறார் துறையூர் ஓடை கிழார். தமக்குள்ள துயர்ப்பாடுகளை வரிசையாய் அடுக்கிக் கூறுகிறார்.

66

கிழிந்த தையல் பலவுடைய உடையின் தையல்வாய் தொறும் பற்றிக் கிடக்கும் பேனின் பகையைச் சொல்வேனா?)

ஊணின்றி ஒடுங்கி கண்ணீர் கசிய நிற்கும் சுற்றத்தார் பசிப் பகையைச் சொல்வேனா?

வறுமையால் வாடும் துயர் நீக்கக் கிடைத்த பொருளைக் கொண்டு செல்லும் வழியில்

குரங்கு போல் தட்டிப் பறித்துக் கொள்ளும் கள்வர் பகையைச்

சொல்வேனா?

இப்பகைகளை யெல்லாம் அறியக் கூடியவன் ஆய் என்று அறிந்து வெப்பமிக்க காட்டுவழியில் நடந்து வந்த நச்சுதலை யுடையேம்யாம். எம்மைப் போன்றவர்க்குத் தரும் கொடையே பிறர்க்குத் தரும் கொடை. எம்மைப் போன்றவர் அல்லாத பிறர்க்குத் தரும் கொடை தமக்குத் தாமே தந்து கொள்வதாம்! நீ உனக்குத் தக்கது ஆய்ந்து செய்க!

எம் துறை யூரின் துறையில் கிடக்கும் மணலினும் நெடிது வாழ்வாயாக என்று வாழ்த்தி நீதந்த வளத்தை யாம் உண்பேம்”

என்றார்.

“எமக் கீவோர் பிறர்க்கீவோர்

பிறர்க்கீவோர் தமக்கீப்”

என்பதும்,

66

“நினக் கொத்தது நீ நாடி

நல்கினை விடுமதி"

என்பதும் வறுமை ஓவியமும் செம்மை ஓவியமுமாம் (136)

6

வள்ளல் ஆய் மறைந்தபின்னரும் மோசியார் வாழ்ந்

துள்ளார். இரங்கலும் பாடி ஏங்கியுள்ளார்.