உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ்வளம்

5

வலிய தேரை இரவலர்க்கு வழங்கிய ஆய் வருகின்றான் என்று வச்சிரத் தடக்கை வளையுடைய இந்திரன் அரண்மனையில் முரசம் முழங்குவத வானில் ஓசைப் படுவதாயிற்று

என்கிறார்

(241)

ஆய் வேளைக் காணவந்த புலவருள் ஒருவர் குட்டுவன் கீரனார். அவர் ஆயைக் காண வாயராய் இறப்புச் செய்தியையே கேட்டு இரங்கினார். அவர் இரங்கல் ஒரு பாட்டாயது:

குதிரையும், யானையும், தேரும், ஊரும் எல்லாம் வழங்கு கொடையாளன் ஆய் அண்டிரன் மனைவியரொடு விண்ணுல கடைந்தான். 'சுட்டுக்குவி என்று கூகை கூவ ஒள்ளெரி நைப்ப உடல் மாய்ந்தது. புலவர் புரவலரைக் காணாது வாடிய பசிய ராகிப் பிறர் நாடு படு செலவினர் ஆயினர் என்பது அப் பாடற் பொருளாம்.

ஆயொடு அவன் மனைவியரும் மாய்ந்தார் என்பது அந்நாள்அரசர் வழக்கு என்பதைப் புலப்படுத்துகிறது (240).

ஆய் வேள் பிறவாப் பெரியவாம் இறைவன் மேல் பற்றாள னாக இருந்தான் என்பது நாகம் நல்கிய நீல ஆடை ஒன்றனை அவனுக்கு வழங்கினான் என்னும் சிறுபாணாற்றுப்படைக் குறிப்பால் அறியப்படும்.

L

ஆய்போலும் வள்ளல் எனினும், முடியுடை மன்னர் எனினும் அவர்களை அந்நாளில் பாடிய புலவர்கள் இல்லாக் கால், க்காலம் அவர்களை அறிதற்கு இயலுமோ?

ஆய் பெயரையும், அவன் மலையத்தையும் அவன் ஆய் குடியையும் அவற்றின் பழமையையும் பாடிய புலவன் பாடல்கள் தாமே அழியாமல் இன்றும் அறியச் செய்கின்றன!

வரலாற்றைப் போற்றிக் கொள்ளாமல் விட்ட தமிழ் உலகத்தில் வாய்த்த தொல் பழ வரலாற்றுப் பெட்டகமாக இருப்பவை புறநானூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் முதலாம் இலக்கியங்களும் பொருளியல் வாழ்வுப் பொலிவாக விளங்கும் தொல்காப்பியமாம் இலக்கணமுமாம் ஆகியவை யாம். ஆதலால் அவற்றை ஆழ்ந்து கற்று ஆய்தல் வழிவழிமக்கள்

கடமையாம்!