46
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
"பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச் செய்யா கூறிக் கிளத்தல்
எய்யாது ஆகின்றுஎம் சிறுசெந் நாவே"
என்கிறார் (148)
கொடையாளர் எனினும் மதியாது கொடுப்பாரை மதி யாது புறந்தள்ளி வந்தவர்களும், அவர்கள் நாணப் பிறரிடம் பரிசு பெற்று வந்த யானையை அவர்களுக்கு வழங்குவதாகக் கூறி விட்டுச் சென்றமையும் சங்கச் சான்றோர் வரலாற்று வழி அறியப் படுவனவாம்.
சிலர் செய்த சிறுசெயலால் அவர்கள் ஆள் நிலத்தைப் பாடாமையுைம், அவர்களைக் கண்டாலும் புறக்கணித்து ஒதுக்க லும் அக்கால வழக்காக இருந்தமை இக்கண்டீரக் கோப்பெரு நள்ளி வரலாற்றாறே அறிய வருகின்றதாம். அதனை மேலே காண்போம்.
பாணர்கள் விடியலில் தம் யாழில் மருதப் பண்பாடுவர். மாலைப் பொழுதில் செவ்வழிப் பண்பாடுவர். நள்ளி கொடுத்த கொடை வளச் செழிப்பாலும், பெருமிதத்தாலும் கற்ற கலையை மறந்தவராய்ப் பாணர் விடியலில் செவ்வழிப் பண்பாடினர்; மாலையில் மருதப் பண்பாடினர்; இசை வல்லவனாம் நள்ளி வன்பரணரிடம் இப்பாணர் காலைப் பொழுதுப் பண்ணை மாலைப் பொழுதிலும், மாலைப் பொழுதுப் பண்ணைக் காலை யிலும் பாடிய முறைமாற்றம் என்ன என்றான். அதற்கு விடையாக வன்பரணர் நீ வழங்கிய கொடை வளமே அவர்களை நிலை மறந்து மாறிப் பாட வைத்ததாம் என்பதை,
"நள்ளி வாழியோ! நள்ளி, நள்ளென் மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கில் செவ்வழி பண்ணி
வரஎமர் மறந்தனர்; அது நீ
புரவுக்கடன் பூண்ட வண்மை யானே’’
என்றொரு பாடலாகப் பாடினார் (149).
புலவர் வன்பரணர் ஒரு காட்டுவழியில் தம் கூட்டத்தொடு வந்தார். நெடிய செலவு; கடியபசி; அயர்பு மிகுதி ; ஆதலால் மேல் நடக்க இயலாதவராக ஒரு பலாமரத்தடியில் சோர்ந்து அமர்ந்திருந்தார். அப்பொழுது செல்வப் பொலிவும் அரசத்