புறநானூற்றுக் கதைகள்
47
தோற்றமும் உடையவனாய் வில் வேட்டுவனாக ஒருவன் அவர் முன் தோன்றினான்.
அயர்ந்து அமர்ந்திருந்த அவரை அவன் தோற்றப் பொலிவு எழுந்திருக்குமாறு ஏவியது; அவரும் எழமுயன்றார். ஆனால் அவ்வேட்டுவன் கையமர்த்தி எழாமல் இருக்கச் செய்தான்.
அவ்வேட்டுவானொடு வந்த கூட்டத்தார் வேறிடத்து இருந்தனர். அவர்கள் வருவதற்கு முன்னர்த் தானே காட்டுள் சென்று விரைந்து, நெய்யிழுது போன்ற ஊனைத், தானே தீமூட்டிச் சுட்டு உம் சுற்றத்தொடும் உண்க என்று வழங்கினான். யாம் எம் சுற்றத்தொடு தின்று பசியாறினோம். அடுத்தே மலைச் சாரலில் ஒழுகிய அருவியின் தண்ணிய நீரைப் பருகிக் களைப்பு நீங்கினோம். யாங்கள் கேளாமலே வந்து கிளை போன்ற உரிமையுடன் ஏவலர்களையும் எதிர்பாராமல் தானே உதவிய அப் பெருந் தகையாளன் தன்மையை வியந்து விடை பெற எண்ணிய போதில், அவன் தன் மார்பிலும், கையிலும் பூண்ட உயர்ந்த அணிகலங்களைக் கழற்றி வழங்கினான்.
ய
அவன் நாடு யாதோ எனக் கேட்க நாட்டைச் சொன்னான் அல்லன். நீவிர் யாரோ என வினாவப் பெயரையும் சொன்னான் அல்லன். யாம் வியப்பின்மேல் வியப்புற்று ஊரும், பேரும் உரையாமல் வழங்கிய அவ்வள்ளல் யாவனோ என வழியே கண்டோரைக் கேட்டு அவன் தோட்டி என்னும் மலைத் தலைவன் என்றும், நள்ளி என்பது அவன் பெயர் என்றும் அறிந்தோம் என்று பாடினார் புலவர் வன்பரணர்.
எந்நா டோஎன நாடும் சொல்லான் யாரீரோ எனப் பேரும் சொல்லான் பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே...
நளிமலை நாடன் நள்ளியவன் எனவே"
புலவர் வன்பரணர்க்கு நள்ளி தந்த ஒரு வேளை உணவை வியந்து அவர் தந்த பாட்டு இன்றும் அவர்கள் காட்சியைக் கண்முன் காட்டி மகிழ்விக்கின்றது அல்லவோ! இவருள் எவர் கொடை உயர் கொடை! புலவர் பாடும் புகழே புகழ் என்று வாழ்ந்த வாழ்வுக் கொடை தானே இவ்வாழ்த்துக் கொடை (150).
கண்டீரக் கோப் பெரு நள்ளியின் உடன் பிறந்தான் இளங் கண்டீரக்கோ என்பான். அவனும் இளவிச்சிக்கோ என்பானும்