புறநானூற்றுக் கதைகள்
49
கண்டீரக்கோன் ஆகலின் நன்றும்
முயங்க லான்றிசின் யானே; பொலந்தேர்
நன்னன் மருகன் அன்றியும் நீயும்
முயங்கற் கொத்தனை மன்னே; வயங்கு மொழிப் பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடுமழை
அணங்குசால் அடுக்கம் பொழியும்நும்
மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே’
என்பது பெருந்தலைச் சாத்தனார் பாடல் (151)
புலவர் பெருமையும் புரவலர் பெருமிதமும் அறிய வரும் வரலாறு நள்ளியினது என்பதை நாம் அறியலாம்.
ஈந்தவன் தகுதி பெரியதே! அதனினும் ஈயப் பெற்றவன் தகுதியும் பெரியதே! உண்ட ஒரு வேளை உணவு எனினும் தகுதியும்பெரியதே! ண்பவனுக்கு உயிரூட்டும் அமிழ்த மன்ன உணவு! அவனோடு அவன் சுற்றத்தவர்க்கும் வழங்கிய விழுமியது.
ஏவலர் இருந்தும் ஏவி வழங்காமல்தானே வேவித்துத் தந்து அவ்வளவில் நில்லாமல் பரிசிலும் வழங்கிப், புகழும் விரும்பாப் புகழாளனாய் ஊரும், பேரும் உரையாமல் கொடுத்த கொடை ஒப்பிலாததாம்! ஒருவேளையில் ஒழிந்து போம் உணவினை பல்லாயிர வாண்டு வரலாறாக ஆக்கிய புலமையன் கொடை, கொடையின் கொடுமுடியாம்!
பத்து உருபா தந்தானைப் பத்து உருபாயனன் (திருமால்) எனப் பாடிப் புகழும் பிற்றைக் காலப் போலிப் புலமையர் போலன்றி அறக் கொலை புரிந்தானைப் பாடாமல் புறந்தள்ளிய புலமை வீறு உள்ளதே அது எத்தகைய பெருமையது!
இத்தகைய வரலாற்று ஊடகங்களே நாம் மீட்டெடுக்க வேண்டிய மேன்மையவாம்!