உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வள்ளல் குமணன்

சங்கக் காலக் கொடை வள்ளல்கள் எழுவர்க்குப் பின்னர்க் கொடையாளனாகத் திகழ்ந்தவன் குமணன். இவனைப் பாடிய புலவர் பெருஞ்சித்திரனார், முன்னைஎழுவரையும் முறையே கூறி அம்மரபில் வந்தவன் நீ என்று குமணனைப் பாடிப் பரிசில் வேண்டுதலால் புலப்படும். குமணன் ஆட்சி செய்த பகுதி முதிர மலைப் பகுதியாகும். பழனிமலைத் தொடரின் ஒருபகுதி இது. இங்கே குமணமங்கலம் என்றோர் ஊரும் உண்டு. உடுமலைப் பேட்டைப் பகுதியைத் தன்னகத்துக் கொண்டது குமணன் ஆட்சி செய்த நாடு. அது முன்னர்ப் பேகனால் ஆட்சி செய்யப் பட்ட பகுதியாம்.

முதிரப் பகுதி இயற்கை வளம் மிக்கது. முகிலுக்கு ஒரு பெயர் முதிரம் என்பது. எப்பொழுதும் முகில் மூட்டத்தொடும் இருக்கும் மலைப் பகுதி என்பதால் அப் பெயர் பெற்றது போலும்.

நிலவளமிக்க முதிரத்தை மனவளமிக்க குமணன் ஆட்சி செய்தமையால் புலவளமிக்க புலவர்களும், கலைவளமிக்க பாணர் கூத்தர் முதலியவர்களும் முதிரத்தை நாடினர்; ஆடினர்; பாடினர்! குமணன் தன் பேறாகக் கருத அவர்களைத் தக்கவாறு பேணி, வேண்டுவனவற்றை வழங்கினான்.

பழமரம் நாடும் பறவை போலக் குமணனை நாடிப் பரிசிலர் இடையறவின்றி வந்து பரிசில் பெற்றுச் சென்றனர். புகழால் சிறந்து விளங்கினான் குமணன்.

குமணனுக்கு முன்னர் வள்ளல்கள் எழுவர் அங்குமிங்கு மாக வாழ்ந்தனர். புலமைச் செல்வர்கள், கலை வல்லார்கள் அவர்களை அடுத்துப் பரிசில் பெற்றுத் தம் கலைவாழ்வை உலகுக்குத் தட்ட தட்டாமல் வழங்கினர். அவர்களால் அக்கால மக்கள் வாழ்க்கை, அரசியல் வரலாறு முதலியவை இன்றும் நம் கையிடைக் காணுமாறு நிலைபெறச் செய்யப்பட்டன.

எழுவர்க்குப் பின்னர் எவரே புலமையாளரைப் போற்று வார்; இரவலர்க்கு உதவுவார் என ஏங்கிநின்ற காலத்தில் கருதிக்