உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

51

கருதி வழங்கும் கார்முகில் போலக் குமணன் தோன்றினான். அவர்கள் எல்லையிலா மகிழ்வுற்று அவனை நாடினர்; பாடினர். அவ்வாறு பாடியும், ஆடியும் பரிசில் பெற்றவர் எவரெவரோ அறியோம்! அறவே அறிந்து கொள்ள முடியாமல் போய்விடா வண்ணம் பெருமைமிக்க புலவர்கள் இருவர் பாடல்கள் புற நானூற்றில் கிடைக்கின்றன. அவற்றைப் பயிலும் போது குமணனைப் பற்றிய தமிழ்வளப் பரப்பு எத்தகையதாக இருந் ததோ அவற்றை முற்றாக அறிந்து கொள்ள வாய்த்திலதே என்றும்ஏக்கம் ஏற்படவே செய்கின்றது.

புலவர் பெருஞ்சித்திரனார் முதிரத்திற்குச் சென்று வள்ளல் குமணனைக் காண்கிறார். அவர் நெஞ்சில் கடந்த காலத்திலிருந்த வள்ளல்கள் தோற்றம் கிளர்கின்றது. அதனால்,

66

“கறங்குவெள் அருவி கல்லலைத் தொழுகும்

பறம்பிற் கோமான் பாரியும்,

கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்,

மாரி ஈகை மறப்போர் மலையனும், கூவிளங்கண்ணிக் கொடும்பூண் எழினியும்,

பெருங்கல் நாடன் பேகனும்,

மோசி பாடிய ஆயும்,

தள்ளாது ஈயும் தகைசால் நள்ளியும் ஆகிய எழுவரும் மாய்ந்த பின்னர், முதிரத்துக் கிழவ, இயல் தேர்க்குமண, நீ இரந்தோர் அற்றம் தீர்க்கென யான் உன்னை உள்ளி வந்தனென்”

என ஒரு பாடலைப் பாடி நின்றார்.

66

எழுவரும் மாய்ந்த பின்னர் எம்மைக் காக்க எவருளார் என்று இரவலர் ஏங்கும் நிலையில் இங்குள்ளான் குமணன் என அறிந்து வந்தேன்! உன் கொடை சிறக்க! உன் படையும் சிறக்க! புகழ் ஓங்குக” என்றார் (158)

எழுவர் கொடைக் கடமையும் ஒருவன் மேல் உள்ளதாய்க் கூறிய புலவர் உரை, குமணனை வயப்படுத்தாமல் விடுமோ? புகழுக்காக இல்லை எனினும், பொறுப்பாகக் கொண்டு வழங்க ஏவும் அல்லவோ!