உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ்வளம்

5

குமணனைப் பாடி, யானையும், பொன்னும், பொருளும், போகமும் பெற்ற பெருஞ்சித்திரனார், குமணனைக் காண்பதற்கு முன் 'வெளிமான்' என்பானைக் காணச் சென்றார். வெளிமான் உறங்கப் போகின்றவன் தன் தம்பியிடம், 'புலவர்க்கு வேண்டுவ கொடுத்து அனுப்புக' என்றான். தம்பியாம் இளவெளிமான் புலவர் தகுதி நோக்காமல் கொடுக்க அதனைக் கொள்ளாமல் திரும்பினார் பெருஞ்சித்திரனார்.

குமணனைப் பாடினார்.யானைப் பரிசு பெற்றதும் விம்மித முற்றார். வெளிமான் அரண்மனையை அடைந்தார். அங்கிருந்த காவல் மரத்தில் யானையைக் கட்டி ஈயாதானுக்கு ஈயும் கொடை ஈதெனக் கூறிச் சென்றார். புலவர் பெருமிதப் பொற்றகடு அப்பாட்டாம் : ம்.

66

"இரவலர் புரவலை நீயும் அல்லை :

புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர் ; இரவலர் உண்மையும் காண் இனி; இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண் இனி; நின்னூர்க் கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த

நெடுநல் யானைஎம் பரிசில்

கடுமான் தோன்றல் செல்வல் யானே!

என்பது அது (162).

குமணனிடம்,

"பனைமருள் தடக்கையொடு முத்துப்பட முற்றிய உயர்மருப் பேந்திய வரைமருள் நோன்பகடு

ஒளிதிகழ் ஓடை பொலிய மருங்கில்

படு மணி இரட்ட ஏறிச் செம்மாந்து

செலல்நசைஇ உற்றனென்”

என்று கூறிய அவர் உள்ளக் கிடக்கை புலப்படச் செய்யும் நிகழ்ச்சி, வெளிமானூர்க் கடிமரத்தில் களிற்றைக் கட்டிவிட்டுச் சென்றதாம்!

யானையொடு வந்த பெருமிதப் புலவர் அதனை விடுத்துத் தேரொடோ, பரியொடோ தம் இல்லத்தை அடைந்து மனை யாளிடம் கூறினார்.

வெளிமானிடம் காட்டிய பெருமிதத்தைக் கூட்டிய பெரு மிதம் ஈதெனக் காட்டிய பாட்டு ஈதாம் :