உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ்வளம் 5

வாய்த்தார் வாழ்வாங்கு வாழ்வார். இம்மூன்றும் எதிரிடை யாயமைந்தோர் வாழ்வாரை வாழவிடுவாரா? அரசாண்ட அண்ணன் குமணனை அதிரச் செய்தது. அவனேனும் நன்றாக வாழட்டும் என்ற எண்ணத்தில் காடு சென்று உறைந்தான்!

காடு சென்றவன் காவலன் மட்டுமல்லன்! நாடு புகழ் நல்லோன்! அவன் நாடாள வேண்டும் என்று நாடே விரும்பி னால் என்ன செய்வது? நாம் முந்திக் கொண்டு அவன் தலையைக் கொய்ய வழிசெய்து விட்டால் நிலைமை சரியாகிவிடும் என எண்ணினான். தீயோரும் தலையாட்டினர்.

இத்தகு இடராம் சூழலில் தான் பெருந்தலைச் சாத்தனார் குமணனைக் காட்டில் கண்டார். அவர் குடும்ப வறுமை அர சிழந்து காடாளும் வேந்தனை இரந்து வேண்டத் தகுமா என்று கூட எண்ண இயலாத நிலைமை! அதனால் தம் குடும்ப நிலையை எடுத்துரைத்தார்.

66

'ஆடு நனி மறந்த கோடுயர் அடுப்பின் ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப்

பாஅல் இன்மையில் தோலொடு திரங்கி

இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை;

சுவைத்தொறு அழூஉம்தன் மகத்துமுகம் நோக்கி

நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கண் என்

மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ

நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண

என்நிலை அறிந்தனை ஆயின் இந்நிலைத்

தொடுத்தும் கொள்ளாது அமையலென்; அடுக்கிய

பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்

மண்ணமை முழவின் வயிரியர்

இன்மை தீர்க்கும் குடிப்பிறந் தோயே”

என்பது அவர் பாடிய பாட்டு (164)

66

“கூத்தர் பாணர் வறுமைத் தீர்க்கும் வள்ளல் குமணனே, சமையல் செய்யப் படாத அடுப்பு. அங்கே காளான் பூத்துக் கிடக்கிறது; குழந்தை பாலுக்கு அழுகிறது; தாயின் மார்புப்பால் துளையே தூர்ந்து போய்க் கிடக்கிறது; குழந்தையோ பசி யாறாமல் தாய் முகம் நோக்கி அழுகிறது; தாயோ மகவின் முகம் நோக்கிக் கண்ணீர் விடுகின்றாள். யானோ அவ்விருவரையும்