உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

57

நோக்கி நோவுற்று, நின்னை நோக்கி வந்தேன். என் நிலையை நீ அறிந்தனை என்றால், உன்னை வற்புறுத்திப் பெறுவதை விட மாட்டேன் என்பது அவர் வேண்டுதலாம்.

நிலைமையை அறியாமல் புலவன் புரவலனை இப்படி வாட்டி வருத்தலாமா? அவன் புலமைக்கு இஃது அழகாகுமா? என வினவத் தோன்றும்! ஆனால் புலவன் பின்னைச் செயல் மாண்பை எண்ணும் ஒருவர்க்கு அவன்மேல் அப்படிக் குறை கூற மனம் வாராதாம்! புலவன் தன் உள்ளுள், உடன் பிறந்தார் பிணக்கத்தை மாற்றி இணக்கமாக்க இவ்வுத்தியைக் கொண் டிருக்கக் கூடும்.

னனில் இச் சாத்தனார் பாடலைக் கேட்ட குமணன், "பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என்

நாடு இழந்ததனினும் நனிஇன் னாது’

99

என எண்ணி வருந்துகிறான் அல்லவோ! ஆதலால் நாட் டாட்சி பெறக் குமணனைத் தூண்டுகிறார் அல்லவோ!

மன்னன்

எனத் தான் இருந்தால் இல்லை என்று சொல்லும் அவலம் ஏற்படாதே எனச் சிந்திக்க வைத்தார்.

குமணனோ, தன் தம்பியின் இயல்பை அறிந்து தன் தலையைக் கொண்டு போய் அவனிடம் தந்தால் புலவனுக்குப் பரிசு வழங்குவான் என்ற உறுதியால், என் தலையைக் கொய்து தம்பியிடம் தந்து பரிசு பெறுக என வாளைப் பரிசாக வழங்கு கிறான்'.

அது புலவனை மேலும் சிந்திக்க வைக்கிறது! இவனிடம் வாள் இருப்பது தீது; எவனோ ஒருவன் இரந்து நின்றால் இவன் என்னிடம் தந்தது போல் அவனிடமும் வாளைத் தந்து தன் தலையைக் கொய்து பரிசு பெறச் செய்து விடுவான் என எண்ணிவனாய், இளங்குமணனைப் போய்க் கண்டான்.

சாத்தனார் வாளொடும், அரண்மனையுள் நுழைந்தது கண்ட இளங் குமணன் திகைப்படைந்தான். என்ன நடந்தது என அறியத் தவித்தான்.

நிலை பெறா உலகத்தில் நிலை பெற விரும்பினோர் தம் புகழை நிறுவி விட்டுத் தாம் இறந்து போயினர்; பெருஞ் செல்வராக இருந்தும் இரப்பவர்க்கு ஈயாமையால் வரலாற்றில் தொடர்பு இல்லாமல் ஒழிந்தார்கள். யான் குமணனைப் பாடி நின்றேன். அவன் பாடுபுலவன் பரிசில் இல்லாமல் போகும்