உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ்வளம் 5

துயரம் என் நாட்டை இழந்ததைப் பார்க்கிலும் பெரியதாம் என்று தன் தலையைக் கொய்யுமாறு வாளை என் கையில் தந்தான். அவனைப் பார்க்கிலும் சிறந்த கொடையென அவன் அப்பொழுதில் என்ன வைத்திருந்தான்? தலைக் கொடை யாளனாம் அவன் செயலை எவர் செய்வார்! தன்னை ஈயும் ஈகைக்கு முன் பொன் என்ன? பொருள் என்ன?

66

-

'அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' என்பதன் சான்று அல்லவோ இது என்று எண்ணவைத்தார்! ஆம்! கல்லையும் கரைய வைத்தார், கைவாளால்! அக் கைவாளைத் தரவும் தான் பெறவும் தன் வறுமைப் பாட்டுதானே ஊடக மாயிற்று! புலவனோடு தானும் உருகிப் புறப்பட்டான். அண்ணனை அழைத்து அரியணை ஏற்றினான். பண்புடையவர்களால் தான் உலகம் வாழ்கின்றது என்பதற்கு இத்தலைக் கொடை சான்றாம்!

புலவர் சாத்தனார் பெருந்தலை என்னும் ஊரினர் என்பர்; குமணன் பெருந்தலையைக் காத்த சிறப்பால் அப் பெயர் பெற்றார் என்பதும் தகுதிதானே!

அவர் பாடிய பாடல் :

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே; துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர் இன்மையின் இரப்போர்க் கீஇயாமையில் தொன்மை மாக்களின் தொடர்பறி யலரே தாள்தாழ் படுமணி இரட்டும் பூநுதல் ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக் கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப் பாடி நின்றனென் ஆகக் கொன்னே

பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென்

நாடிழந் ததனினும் நனிஇன் னாதென

வாள்தந் தனனே தலை எனக் கீயத்

தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின் ஆடுமலி உவகையொடு வருவல்

ஓடாப் பூட்கை நின் கிழமையோற் கண்டே

என்பது (புறம். 165)

புகழ் பட வாழ்வார் எண்மரைக் கண்டோம். பாடு புகழ்ப் பேறு வாயாமல் எத்தனை எத்தனையோ கொடையாளர்கள்