66
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
கணைக்காலனுக்குப் பேச நா எழவில்லை. சிந்தனையிலே ஆழ்ந்தான், அன்று இரவும் அவனுக்கு உறக்கம் வரவில்லை. என் னென்னவோ காட்சிகள் நினைவுக்கு வந்து கொண்டு இருந்தன. சிந்தனையோட்டம் எங்கேயோ போய்க்கொண்டு இருந்தது.
வீரர்களுடன் கணைக்காலன் ஒரு நாள் வேட்டைக்குச் சென்றான். காட்டில் சுற்றித் திரிந்து களைப்பு அறியாமல் வேட்டை ஆடினான். வீரர்களும் உயிர்த் தொகைகளைக் கொன்று குவித்தனர். தூக்கிக்கொண்டு வருவதற்குத் திண்டாடும் அளவும் வேட்டையாடித் தீர்த்து விட்டனர். அங்கேயே ஓரிடத்தே நெருப்புமூட்டி வாட்டினர். உண்ணுமட்டும் உண்டனர். தங்கள் உதவிக்குக் கொண்டுவந்த வேட்டை நாய்களுக்கும் வேண்டு மட்டும் ஊன் போட்டனர்.
நாய்களெல்லாம் எலும்பையும் கறியையும் ஆசையாய்த் தின்றுகொண்டிருந்தாலும் ஒரே ஒரு நாயை மட்டும் அருகில் வர விடவில்லை. அன்று வந்த புதிய நாய் அது. வேட்டையாடும் திறமையைக் கருதி எங்கிருந்தோ கொண்டு வந்திருந்தனர். அது மற்ற நாய்களுடன் வரவே மறுத்தது. இருப்பினும் வீரர்கள் விடாமல் இரும்புச் சங்கிலியில் பிணைத்து இழுத்துக் கொண்டே வந்து விட்டனர். அதுவும் தப்பிச்செல்ல முனைந்தது. கைக்கு வந்த நாயை விட்டுவிடுவார்களா? இழுபட்டுக்கொண்டே வந்தது. மற்ற நாய்கள் வேட்டையாடும் பொழுதில் அமைந்து கிடந்தன. இப்பொழுது ஊனைப் பங்கு வைக்க வருகின்றது என்று நினைத்துக் கொண்டு ஓடி ஓடி வெருட்டிக் கடித்தன. இரத்தமும் ஒழுகிக்கொண்டு வந்தது.
வேட்டைக்கு உதவி புரிந்த நாயை, நாய்களே வேட்டை யாடுவதைக் கண்ட வீரர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் முடிய வில்லை. புதிய நாயையே பிடித்து மீண்டும் சங்கிலியால் பிணைத்துக் கட்டினர். ஊன் தனியே இட்டனர். ஆனாலும் மற்ற நாய்களின் உறுமல் ஓயவில்லை. அவ்வொலியைக் கேட்டுக்கொண்டு புதிய நாயும் தின்ன முடியவில்லை. உறுமிக்கொண்டே நின்றது.
பொழுது போய்விட்டது; வீரர்கள் வீடு நோக்கினர். புதிய நாயை மட்டும் விட்டுவிடாது பிடித்துக் கொண்டு நடந்தனர். ஐயோ! அதன் கழுத்து வலி எடுக்க, நாக்குத்தள்ள, பசி வருத்த துன்புற்றுக்கொண்டே நடந்தது. ஓடவும் முடியவில்லை. நிற்கவும் முடியவில்லை. ஓரிடத்தே நடக்கமுடியாமல் விழுந்தது. பாராமல் நடந்த வீரன் இழுத்துவிட்டான். நிலத்திலே இழுபட்டுத் துடித்