உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

67

தது. சுற்றித் திரியும் நாய்க்கு, மற்ற நாய்களின் சண்டையால் ஏற்பட்ட கொடுமை இது.

இந்நிகழ்ச்சியை எளிதாகக் கருதி வீரர்கள் மறந்து விட்டார்கள். ஆனால் கணைக்காலனோ “இது என்ன பிழைப்பு? மானம் அற்ற பிழைப்பு? இது து நாயானதால் இழுபடும் சிறுமையைப் பொறுத்துக் கொள்ள வேண்டியது ஏற்படுகிறது. மனித இனத்திற்கு அதிலும் மானமிக்க வீரர் இனத்திற்கு க் கொடுமையைத் தாங்க முடியுமா?" என்று நினைத்தான்.

6

அந் நாயைத் தனியே கட்டுமாறு செய்து ஊனும் போடச் செய்தான். நாய் எத்தகைய பழைய நினைவும் இல்லாமல் ஆசையுடன் தின்றது. அதனைக் கண்டு "இழுப்பும் இழிவும் பட்ட நாய் இப்பொழுது தனியிடத்திலே நிற்கிறது. எதிரே எந்த நாயும் இல்லை. பழைய நிகழ்ச்சியை மறந்து விட்டு வயிறு புடைக்கத் தின்கிறது. மனிதர் இச்செயல் செய்வரோ? நாய் நாய்தான்!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான், கணைக் காலன் இவ்வாறு சிந்தித்தான்; மற்று எல்லோரும் சிந்திக்கவா செய்தார்கள்?

சூடி

கணைக்காலனுக்கு ஆண்டுகள் சில கடந்தன. அவன் முடி ஆட்சிபுரிய வேண்டுமென்று அரசன் வேண்டிக் கொண்டான். அமைச்சர்களும் அதுவே தக்கது என்று கூறினர். அரசர் நன்னிலைமையில் இருக்கும்பொழுதே முடி சூட்டி வைத்து அரசியலுக்குத் துணையாக இருப்பதே நலம் தரும் என்று அறிவுடையவர்களும் வேண்டினர். அதனால் நல்லதோர் நாளிலே கணைக்காலன் சேர நாட்டின் வேந்தன் ஆனான். அதுமுதல் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்று அழைக்கப் பெற்றான்.

கணைக்காலன் தன் மாணவன் அரசப் பொறுப்பு ஏற்ற அன்று பொய்கையார் அடைந்த மகிழ்ச்சி “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்பதனினும் பன்மடங்கு மிகுந்திருந்தது எனலாம், நாடு போற்ற, நல்லவர் வாழ்த்த கணைக்காலன் முடி சூட்டிக் கொண்டான்.

அரசனான பின் கணைக்காலன் முன்போல அமைதியாக இருந்துவிட முடியவில்லை. ஆட்சிப் பொறுப்பு அவனை அலைக் கழித்தது. அவன் உள்ளம் அறிவு நூல்களிலே தோய்ந்தும், பொய்கையார் உரையில் பதிந்தும் இருந்தாலும் சிக்கல்கள்