உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ்வளம்

5

மிகுந்தன. உள்ளத்தின் உறுதிப் பாட்டுக்குச் சூழ்நிலையும் உதவி செய்யுமானால் நன்மையாக இருக்கும். ஆனால் முரண்பாடுகள் குறுக்கிட்டால் என்ன செய்வது?

கணைக்காலனுக்கு மூவன் என்பவன் பகைவனாகி விட் டான். மூவன் நாடு வளமான நாடு. அது கடற்கரையை அடுத்து இருந்தது. பொய்கையிலே இருக்கும் மீனைப் பற்றியுண்ட நாரைகள் வைக்கோற் போரிலே கவலை அற்று உறங்கும். நெல்லரியும் உழவர் மக்கள் ஆம்பல் இலையைத் தொன்னையாக மடித்து அதில் சுவை மிகுந்த மதுவை ஊற்றி உண்டு களிப்பர். களைப்பு மிகுதியாகி விட்டால் கடலிலே புகுந்து விளையாடி இன்புறுவர்

இவ்வாறு இன்பமே உருவான வளநாட்டை அமைதியாக ஆண்டு கொண்டிருக்காமல் கணைக்காலனை எதிர்த்தான் மூவன். இது பெரும் தவறு அல்லவா! கணைக்காலனும் மூவனும் களத்தில் சந்தித்தனர். மூவன் தன் படை ஒன்றையே நம்பி வந்தான். கணைக்காலனோ தன் படையோடு தன்னையும் நம்பி வந்தான். அவனால் தனித்து நின்று ஊக்கத்துடன் போர் செய்து எத்தகைய பகைவரையும் அடக்கி விட முடியும். இதனை முன்பு மூவன் அறியமாட்டான். போர்க் களத்திற்கு வந்த பின்பே அறிந்தான். அறிந்து பயன்? தன்னுடன் வந்து தனியே விட்டுச் செல்லும் வீரர்களைத் தொடர்ந்து ஓட முடியவில்லை சூழ்ந்து கொண்டு சிறை செய்து பல்லைப்பிடுங்கினான். பிடுங்கிக் கொண்டு நாட்டுக்கு ஓடுமாறு வெருட்டி விட்டான்.

மூவனைக் கொன்றே இருக்கலாம் கணைக்காலன். அது இயல்பாகப் போயிருக்கும். நாடு இகழுமாறு இத்தகைய பாட மாக இருக்காது என்று கருதிவிட்டான். போலும்! அமைதி யோடும், வளத்தோடும் வாழ்ந்த மக்களைப் போர்க்களத்திற்கு இழுத்து வந்து நிறுத்தியதன் தண்டனையால்தான் மூவன் பல்லைப் பறிகொடுத்தான் போலும்.

மூவன் பல்லைக் கணைக்காலன் என்ன செய்தான்? களத் திலே எறிந்து விட்டானா? தவறி விடாமல் கொண்டு வந்து தொண்டி நகரின் கோட்டை வாயில் கதவிலே பதித்தான். மூவன் வாயிலே இருந்து பறித்துக் கோட்டை வாயிலிலே பதித்து விட்டான். வாய்க்குப் பல் இன்றியமையாதது. வாயிலுக்குப் பல் வேண்டியது இல்லை. தேவையற்றதையும் செய்து முடிக்கின்றது கிளர்ச்சி கொண்ட உள்ளம்!