70
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
பசு, நீரை உண்டு பாலைத் தருவதுதான்! பசும் புல்லை உண்டு பயிருக்கு உரமாகும் சாணம் தருவதுதான்! தன் வாழ் நாளெல்லாம் பிறருக்கே பயன்படும் ஒன்று தான்! தெய்வத் திருக்கோலத்தை வெளிக் காட்டுவதுதான்! இருப்பினும் அதற் காகக் கூட “நீர் தருக’ என்று இரந்து கேட்பது நாவுக்கு இழிவே. இதனைப் பொய்யில் புலவரும்.
66
“ஆவிற்கு நீரென்(று) இரப்பினும் நாவிற்(கு) இரவின் இழிவந்த(து) இல்
என்றார்.
இத்தகைய இழிவுகள் நிரம்பிக் கிடக்க மூவன் பல்லைப் பறித்தது, அவனுக்கு இழிவாவது எப்படி?" என்று கேட்டார். புலவர்கள் வாயடங்கினர். கணைக்காலன் செருக்கழிந்து தலை குனிந்தான். தலைக்குனிவின் இடையே புலவர் உரை இதுகாறும் அறியாத அறிவுச் சுரங்கம் ஒன்றைத் தந்தது குறித்து மகிழ்ச்சியும் அடைந்தான்.
பொய்கையார் கணைக்காலன்மேல் கொண்ட அன்பால் அவனிடமே தங்கிவிட்டார் அல்லவா! அவர் எப்படியும் தன்னை நாடி வருவார் என்று சோழவேந்தன் செங்கட்சோழன் என்னும் செங்கணான் எண்ணியிருந்தான். பொய்கையாரைப் பற்றிக் கேள்விப்பட்ட பின்னர், அவரைப்பார்க்கவும், அவர் புலமைச் செல்வத்தை அடையவும் ஆசைப்பட்டு இருந்தனன். பொருள் கருதி வரும் சமயம் ஒன்று ஏற்படாமலா போய்விடும் என்பது அவன் எண்ணம்.
புலவர்தான், 'இழிவிலே தலையாய இழிவு தம் திறமை அறியாத ஒருவனிடம் போய் இரந்து நிற்பது' என்ற முடி வுடையவர் ஆயினரே. வருவாரோ? வரவே இல்லை. செங்கட் சோழனுக்குப் பாராமல் இருக்கவும் முடியவில்லை. தக்கார் சிலரை அனுப்பிப் பொய்கையாரைத் தம் நாட்டுக்கு அழைத்து வருமாறு வேண்டினான். ஆனால் பொய்கையார் சோழ நாட்டுக்குச் செல்ல மறுத்து விட்டார். வந்தவர்கள் காரணம் கேட்டனர்.
ஆராய்ந்த பேரறிவும், அடங்கி அமைந்த பண்பும் இல்லாத ஒருவன் அழைப்பை ஏற்றுக் கொண்டு வர ஒருப்படேன் என்றார், ஏமாற்றத்துடன் வந்தவர்கள் திரும்பினர். சோழனிடமும் புலவர் உரையை உரைத்தனர். நாடாளும் வேந்தன் என்ற காரணம்