புறநானூற்றுக் கதைகள்
71
கொண்டாவது அழைப்பை ஏற்றிருக்கலாம். அது முடியாது ஆயின் தாம் வரமுடியாது என்று கூறி மறுத்திருக்கலாம் அதற்கு என்னை இகழ்ந்துரைக்கவும் வேண்டுமா? என்று புண்பட்டான். ஆனாலும் நொடிப் பொழுதில் அதனை மறந்தான்.
ஏனென்றால் அதனை நினைத்துக்கொண்டு செயல் ஆற்றினால் ஒரு நாளும் புலவர் வரும் நல் வாய்ப்பைப் பெற முடியாது என்று தெளிவாக அறிந்துகொண்டான். ஆனால் பொய்கையார் மீதுள்ள பகை அவரை விட்டு அவரை உரிமையாகக் கொண்டுள்ள சேரன் கணைக்காலன் மேல் தாவியது. அவ்வளவுதான்.....!
என்று
ஒரு நாள் சோழன் படைத்தலைவன் பழையன் என்பவன் பறை முழக்கினான். "சேரநாட்டீர்! வருக போருக்கு அழைத்தான். அவன் இறுமாப்புரையைக் கேட்டுவிட்டும் ‘வாளா' இருப்பானா கணைக்காலன்? அவனுடைய வீரர்களும் ஓய்ந்திருக்க விடுவார்களா? புறப்பட்டுவிட்டார்கள் போர்க் களத்திற்கு.
சேரன் தன் படைகளை நான்கு கூறுகளாகப் பிரித்தான். நன்னன், அத்தி, கங்கன்கட்டி, புன்றுறை ஆகியவர்கள் பொறுப்பில் ஒவ்வொரு பிரிவையும் ஒப்படைத்தான். சேரநாட்டின் காட்டிலே திரிந்த களிறுகள் அனைத்தும் களம் நோக்கிப் புறப்பட்டன. குதிரைகளுக்கும் தேர்களுக்கும் குறைவு இல்லை. கடல் அலை போலக் காலாள் வீரர் அணிவகுத்துச் சென்றனர். பழையன் இப்படைகளைக் கண்டு அஞ்சிவிடவில்லை. அவனோ இப்படைகள் அனைத்தையும் ஒரு பகலில் ஒழிப்பேன். போரி லேயே பழகி விட்ட என்னை எதிர்க்கும் பகைவரும் உளரோ? இன்று பழையன் போர் அன்று; எமன் போர் என்று எதிரிகள் அறியட்டும்" என்று ஓங்கார ஒலியிட்டு படையை எதிர்நோக்கி நின்றான்.
66
இருதிறப் படைகளும் ‘கழுமலம்' என்னும் இடத்தே சந்தித்தன. புலியும் புலியும், சிங்கமும் சிங்கமும், மேகமும் மேகமும், மலையும் மலையும், கடலும் கடலும் எதிர்த்துத் தாக்குவது போல இருபக்கத்துப் படைகளும் தாக்கின. ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு பழி வாங்குவதில் முனைந்து நின்றனர். பழையன் ஒருவனைச் சேர வீரர் நால்வரும் வளைத்துக் கொண்டு தாக்கினர். சோழ வீரர்கள் சோர்ந்துவிடவில்லை. நல்ல எதிர்த் தாக்குதல் தாக்கினர்.