72
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
ல
இதற்கு முன் இப்போரைப் போலும் ஒரு போரைக் கண்டதே இல்லை என்று கூறும் அளவுக்கு மேலோங்கினர். நேரம் செல்லச் செல்லப் பிணக்குவியல் மலை மலையாகக் குவிந்தது. இரத்தம் வெள்ளமாகப் பெருகியது, மூளைச் சேறும், கொழுப்பும் மிகுந்து வழுக்குதல் உண்டாக்கின. வழுக்கி வீழ் வோர் தங்கள் படைக் கருவிகளாலேயே தாங்கள் தாக்குண்டனர். எழுந்து நடக்கத் தொடங்கிச் சறுக்கி வீழ்ந்தனர். குதிரைகளும் யானைகளும் பட்டுமாய்ந்து குவிந்து விட்டன! களத்திலே நிற்பதற்கே இடமில்லாது போய்விட்டது.
சேரன் தன் படைத் தலைவர்களை ஊக்கப்படுத்தினான். பழையன் ஒருவன். நீங்களோ நால்வர்” என்றான். சங்கம் முழக்கினான். அது படைத் தலைவர்களையும், வீரர்களையும் பழிவாங்குமாறு தட்டி எழுப்பியது. 'அடியுங்கள்: எறியுங்கள்; தாக்குங்கள்; வெட்டுங்கள்; வீழ்த்துங்கள்” என்று முழக்கிக் கொண்டே களத்தில் புகுந்தான்.
கணைக்காலன் போரில் குதித்துவிட்டான் என்று அறிந்தது சேரர் படை. செம்மாந்து தாக்கியது. இதோ! இதோ! பார்! என் வீரத்தை என்று மேல் மேல் பாய்ந்தது. பொழுதும் மறையத் தொடங்கியது. பாவம்! பழையன் தலையும் நிலத்திலே வீழ்ந்தது. ஓ ' வென்று அலறிக் கொண்டிருந்த போர்க்களம் பழையன் வீழ்ந்ததும் ஒருவாறு அடங்கியது.
படை இரவிலே திரும்புதல் கூடாது என்று சேரன் பாசறை உண்டாக்கித் தங்கினான். சோழர் படை, பழையன் இறந்து விட்டாலும் பதைபதைத்து விடவில்லை. விடியட்டும் என்று எண்ணிக்கொண்டு தங்கினர். சோழன் நடந்ததை அறிந்தான். பெரும் படையுடன் புறப்பட்டான். “வெற்றி பெறாமல் மீளாது என் வீரவாள்' என்று வஞ்சினம் கூறினான். ‘பழையனைக் கொன்ற பகைவர்களே! வருகின்றேன் உங்கள் கை வரிசையைக் காட்டுங்கள். அவனை நீங்கள் எங்கே அனுப்பி வைத்தீர்களோ, அங்கேயே உங்களை அனுப்பி வைப்பேன்; ஐயமில்லை” என்று சினங்கொண்டு இரவோடு இரவாகப் போர்க்களத்திற்கு வந்து தங்கினான்.
சோழன் வந்து சேர்ந்தது நள்ளிரவுப் பொழுது! அயர்ச்சி மிகுதியால் வீரர் சிலர் உறங்கினர். சிலர் தங்கள் புண்ணின் வலியால் முணகிக் கிடந்தனர். இன்னும் சிலர் தோல்வியை எண்ணி நெஞ்சம் கொதித்துக் கண்ணை மூடாது அரற்றிக் கொண்டு இருந்தனர். அடுத்த நாள் எப்படிப் பகையை ஒழிப்பது