உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

77

சோழன் தந்த விடுதலைச் சீட்டுக் கொண்டு குடவாயில் கோட்டத்திற்குப் புறப்பட்டார் பொய்கையார்.

சிறையிற் கிடந்த சேரமன்னன் உண்ணவும் இல்லை; உறங்கவும் இல்லை. சோர்ந்து விட்டான். நாவறண்டது. அவ னால் நீர்வேட்கையைத் தாங்க முடியவில்லை. எதையோ நினைத்தவனாய் வாயில் காவலனை நோக்கித் “தண்ணீர் தருக’ என்றான். அவனும் சற்று காலம் தாழ்த்தித் தண்ணீர் கொணர்ந்து தந்தான்.

وو

தண்ணீர்க் குவளையைத் தன் கையால் எடுத்தான் சேரன்! தண்ணீர் பேசியது! உணர்ச்சிமிக்க சேரனிடம் தண்ணீர் பேசியது. எப்படி? “ஆவிற்கு நீரென்று இரப்பதும் நாவிற்கு இழிவு” என்று. சேரன் தலை சுழன்றது. உள்ளம் நடுங்கியது. உடலெல்லாம் ஆட்டம் கொடுத்தது. என்ன கொடுமை செய்துவிட்டேன்! தண்ணீர் தாவென்று இரந்து வாங்கி உண்ணும் வாழ்வும் ஒரு வாழ்வா? ஐயகோ! இப்படி இரந்தும் உயிர் வாழவா என்னை ஈன்றார்கள் என் பெற்றோர். அம்மவோ! கொடுமை! மாபெருங் கொடுமை!

66

உயிர் தந்து, உடல் தந்து, உணவு தந்து காப்பாற்றிய நாட்டுக்காகத் தங்கள் உயிரைத் தந்தார்கள் சேர வீரர். அவர்க ளோடு நானும் என்னருமைத் திருநாட்டுக்காக உயிரை ஈந்திருக்க வேண்டும் போர்க்களத்தே! அது தவறினேன்.

"பகைவர் நாட்டின் எல்லையை மிதிக்கும் போதாவது 'ஆ! ஆ! கொடுமை! பகைவன் மண்ணிலே அடிமையாய் மிதிக்கவா! முடியாது; முடியவே முடியாது என்று செத்துத் தொலைந் திருக்க வேண்டும். அதையும் விட்டுத் தொலைத்தேன்.

“காவிரி வெள்ளத்தையும் கடந்துவந்தேன் கசடன். இனி இவன் தரும் தண்ணீரை உண்டு தானே உயிர் வாழவேண்டும்? அதுவும் ஒரு வாழ்வா” என்று எண்ணி அலையோடு அலையாக உருண்டு தொலைந்திருக்கவேண்டும் பாவி! தவறிவிட்டேன்.

66

'இச்சிறைக் கோட்டத்தின் இரும்புக் கதவுகளுக்கு டை யே சிக்கிச் சீரழியுமாறு தள்ளப் பெற்றேன். அந் நேரமாவது உணர்ச்சி வந்திருக்க வேண்டும். 'சேரா! உன் உயிர் என்ன கரும்பா! உன் நாட்டை இழந்து, நம்பியிருந்த மக்களைத் துறந்து, நாய்போல் இழுக்கப் பெற்றுக் கொடு விலங்கு போல் சிறை வைக்கப் பெற்றுள்ளாயே ‘இப் பிழைப்பும் ஒரு பிழைப்பா என்று எண்ணிச் செத்திருக்க வேண்டும்’. அதுவும் கெட்டேன்.