78
66
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
'ஐயோ! 'சிறைக்காவலனே சிறிது தண்ணீர் தா!' என்று என் வாயால் கேட்டேனே! மானம் உண்டோ எனக்கு? மன்னவன் என்ற தன்மானம் உண்டோ எனக்கு? எல்லாம் கெட்டேன். ஆனால் கேட்டு வாங்கிய தண்ணீரைப் பருகிவிடவில்லை. பிழைத்தேன்!
66
“நீரே! என் மான உணர்ச்சியைத் தட்டி எழுப்பிய தண் ணீரே! நன்றி. பொய்கைப் புனிதர் கூறினார். பொய்யா மொழி யாரின் ‘ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இழிவு' என்ற உரையை. அது என்னை மானமுடையவனாக ஆக்கிவிட்டது. தக்க சமயத்தில் நினைவு படுத்தி விட்டாய். உன்னை வாழ்த்து கின்றேன்.
வி
"புலவர் பெருமானே! நீர் எங்குள்ளீரோ? எவ்வாறு ஏங்குகின்றீரோ? உம் நிலையை உணர்வினால் இப்பொழுது அறிகின்றேன். இனிமேல் அதுவும் முடியாது! உம் மாணவன் வணக்கம்!
'சோழ! நீ வாழ்க! நீ இங்கு வருவாய். என்னைக் கண்டு இறுமாப்பு அடையும் ஒன்று கருதியாவது இங்கு வருவாய்! ஆனால் இங்கு வந்தவுடன் நீ என்ன பாடு படுவாய் என்பதை அறிவேன். சோழ!என்ன ஆனாலும் சரி, சேரன் செத்துத் தொலைந்தான் என்று செம்மாந்து திரியமாட்டாய். முட்டி முட்டி அழுவாய்! மோதிக் கொண்டு புரள்வாய்! என் வெறியையும், உன் வெறியின் விளைவையும் எண்ணி எண்ணிப் புண்படுவாய். அறிவேன்; நன்றாக அறிவேன்.
"குழந்தையாகப் பிறந்து இருந்தாலும் சரி, கருவிலேயே செத்து வந்தாலும் சரி, சுட்டெரிக்கும் போது வெட்டத் தவறாத வீர இனம் என் இனம். இவ்வினத்தின் தலைவர்களாகிய என் பெற்றோர் மானமின்றி வாழவோ பெற்றனர் என்னை? சங்கிலியால் பிணைக்கப் பெற்ற நாய் போல இழுபட்டு வரவோ பெற்றனர்? மானமின்றி மாற்றான் சிறைக் கூடத்திலே கிடந்து தண்ணீர் தாவென்று கேட்டு இரந்து வாங்கி உண்ணும் நிலைமைக்காகவோ பெற்றனர்? நெஞ்சம் கொதிக்கின்றதே நினைத்துவிட்டால்! என் பரம்பரைக்கே இழுக்கு என் வாழ்வு!”
ஈன
கணைக்காலன் பாட்டு ஒன்று எழுதினான். நிலத்திலே வீழ்ந்தான்! சுருண்டு கிடந்தான். அதற்குமேல் புரளவே இல்லை!
அன்பனைக் காணும் ஆசையுடன் அரசன் ஆணையைக் கொண்டு வந்த பொய்கையார் சிறைக் கோட்டத்தின் வாயிலுக்கு வந்தார். காவலன் கதவைத் திறந்து விட்டான். கதவு, ‘கிரீச்'