புறநானூற்றுக் கதைகள்
79
என்னும் ஒலியுடன் திறந்து, ஓ வென்று அலறியது. அது கணைக்காலன் இறந்துவிட்டான் என்று கூவி அழுவது போல் இருந்தது.
பொய்கையார் உள்ளே புகுந்தார். சேரன் நிலத்தில் கிடப்பது வேதனை ஊட்டியது. 'சேரச் செம்மலே! எழுந்திரு. அரச பாரத்தைச் சுமந்து இளைத்த நீ அயர்ந்து உறங்கு கின்றாயோ? கணைக்காலா! கதிர் எழுந்துவிட்டது. இன் ன்னுமா உறக்கம்? மாண்பு மாணவ! எழுந்திரு! மன்னவ! எழுந்திரு!” என்று எழுப்பினார். இறந்த சேரன் எழும்புவது எங்கே?
புலவர் குனிந்து புரட்டினார்; ஐயகோ! உணர்ச்சி இல்லை சேரனுக்கு. விழுந்தார்; புரண்டார்; எழுந்தார்; விம்மினார்; முட்டினார்; மோதினார்; மார்பிலே தாக்கினார்; திட்டினார்; உளறினார்; ஓங்கித் தலையிலே இடித்தார். துடித்தார்! அந்தோ! அறிவுப் புலவர் அவர் மாணவனுடன் ஒன்றுபட்டுவிட்டார். நான்கு மலர் விழிகள் மூடிக்கிடந்தன! அதற்குமேல் அவை மலரவே இல்லை!
சேரமான் கணைக்கால் இரும்பொறை பாடிய பாட்டு. ‘குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆள் அன்று என்று வாளில் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை ஈன்மரோ இவ் வுலகத் தானே!”
—
புறநானூறு 74.