திருக்குறள் ஆராய்ச்சி
―
1
83
வழிபடு தன்மை
வழிபடு தன்மையானது, மதித் தொழுகும் இயல்பு. ஒரு பொருளின் மேல் உள்ள மதிப்பும் ஒருவர் மேல் உள்ள மதிப்பும், இதனையும் போற்றிப் பேணிக் கொள்ள உதவும். அவ்வகையில், மனைவியால் மதித்துப் போற்றிக் கொள்ளத் தக்காருள் முழுமை யானவனும் முதன்மை யானவனும் கணவனே. மனைவியாம் பெண்மகள், தன் பிறந்தகத்தை விடுத்து எவனை நம்பிப் புகுந் தகத்துப் புகுந்தாள்? கணவனின் பெற்றோரை நம்பி என்றோ, அவன் உடற் பிறப்பை நம்பி என்றோ, அவன் உற்றாரை நம்பி என்றோ, மூளைத் திரிபுடைய ஒருத்தி கூட உரையாள்.
ப
மங்கல மகளிரே மணவிழாவை முன்னின்று நடத்திய பழைய நற்கால நிலையில், அவர்கள் மணமகளாம் மனைக் கிழத்திக்குக் கூறிய அறிவுரை மூன்றனுள் தலையாய ஒன்று 'பெற்றோன் பெட்கும் பிணையை ஆகு’ என்பதே (அகநானூறு. 86) ‘கணவனால் விரும்பப்படும் நல்ல மனைவியாக விளங்கு' என்பது இதன் பொருளாம்.
அன்பு ஒற்றை வழிப்பாதை அன்று; இரட்டை வழிப் பாதை; போக்கும் வரவும் உடைய இரட்டைவழிபோல் கொடுத்தும் கொண்டும் சிறப்பது அன்பு. ஆதலால், தான் கணவனை வழிபட்டுப் போற்றும் தன்மையால் அவன் தன்னைப் போற்றும் பேற்றைத் தானும் பெறுகிறாள்.
அ
இல்லறமே நல்லறமாகக் கொள்வார் மனைக்குத் துற வோரும் முனிவரும் விருந்தினராய் வருதல் வழக்கு. அவர் களைப் போற்றல் இல்லறத்தார் கடமை என ஏற்றதும் தமிழ் வழக்கு. ஆதலால், அம் முனிவரை ஓம்புதலைத் “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” என்று குறள் கூறியது. இத் தெய்வம் என்பார் முனிவர் அல்லது துறவியராம்.
ப
தம் இல்லத்திற்கு வரும் பற்றற்றாரை வணங்கி வழிபட்டு விருந்தோம்புதலில் தன் குழந்தைப் பருவத்தில் பெரும்பங்கு கொண்டிருந்தவள் இந்நாளை மனைவி. அவள், தன் இளந்தைப் பருவத்தில் தன் பெற்றோரொடும் இருந்து துறவரை வழிபட் யல்பைப் புகுந்த வீட்டில் கொள்ளுதல் ஆகாது. தன் கணவனையே அத்துறவரை வழிபட்டது போல் வழிபட்டு, வேண்டும் கடமை புரிதல் வேண்டும் என்னும் வாழ்வியல் முறையொழுங்கு காட்டுவதே,
வ