82
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
எண்ணியதை எண்ணியபடி முடிக்க வல்லார்க்கு என்ன வேண்டும்? 'திண்மை' வேண்டும்! திண்மையாவது உறுதிப்பாடு. அதனை உடையவர், திண்ணியர் (666). திண்மைக்கு மேலும் விளக்கம் வேண்டுமா? உரியார் அன்றிப் பிறர் உட்புகாத் திண்மை மதில் வெளிப்பட விளக்கும் பெருஞ் சான்று இல்லையா (743). கல்லும் சாந்தும் நீரும் இட்டு ட்டு, குற்றி டித்து வலுவாக்கும் 'திண்ணை' நம் கண்ணை அகலுமா?
ஊடுருவும் ஒளிக்கதிரும் உண்டு! அயலார் ஒருவரால் ஊடுருவிச் செல்ல மாட்டா உருக்குக் கோட்டை, உரியான் ஒருவனுக்கே உருகும் கற்புக்கோட்டை! அணுவும் துளைக்க மாட்டா ஆழ்புலத்து அறையையும் வெல்லும் வாழ்புலத்து அறை கற்பு!
இது, அவனுக்கு வேண்டாவா? வேண்டும்? அவளைப் பார்த்தாவது அவன் அவ்வுறுதிப்பிடி கொள்ள வேண்டும். அதற்காக, அவளைச் சுட்டிக் காட்டி அருமையாய் உரைக்கிறது வள்ளுவம்.
66
ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு”
என்பது (974) அது.
'தான் திருடி அயல் நம்பாள்' என்பது போல், மனைவி உறுதியில் ஐயங் கொண்டு வேண்டாக் கட்டும் காவலும் செய் வான் உளனே, அவன் செயல் என்ன?
எண்ணிப் பார்த்துத்தானே 'மனைவி' என ஏற்றான், உறுதி செய்து கொண்டுதானே இறுதி முடிவெடுத்தான்; உறுதி கொண்டது தவறு என்றால் அத்தவறு எவரைச் சேரும்? தெரிந்து தெளிதல் வினைக்கே,
“தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்’
எனக் கண்ட வள்ளுவம், தன் துணையின் உறுதியை ஐயுற்றுச் சிறை காக்கும் காவலை ஏற்றுக் கொள்ளுமோ? காவல் என்பது அவரவர் மனக்கட்டு. மற்றை மனைக் கட்டும் புரிக்கட்டும், சிறைக்கட்டும் சிறுமைக்கட்டே.
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை
(57)