98
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
அமைந்த பொருள் என்பதும், பெற்றோர் தம் மக்கட் பொருளுக்குத் தர வேண்டிய அரும்பெரும் பொருள் அறிவே என்பதும், அவ்வறிவும் பழியறியாப் பண்பொடு கூடிய அறிவு என்பதுமாம்.
வளர்ப்பு
இனி மக்களைப் போற்றி வளர்க்கும் முறைமையும், அவ்வாறு வளர்த்தலால் தாம் பெறும் இன்பமும், அவர்கள் கொள்ளும் நலமும் முக்குறள்களில் மும்மணிகளெனக் கூறுகிறார் வள்ளுவர். (64-66).
அளவளாவுதல்
இல்வாழ்வின் வெற்றிக்கும் பெற்றோர் கடமை நிறை வேற்றத்திற்கும் இன்றியமையாத ஒன்று அளவளாவுதல். அள வளாவுதல் அமைந்த இல்லறம் சிறக்கும்! குடிநலம் கொஞ்சும்! அளவளாவுதல், அன்பால் உண்டாகும். அளவளாவுதல் மேற் கொண்டால் உள்ளந் திறந்து பேசும் வாய்ப்பு ஏற்படும்.
ஒவ்வொருவரும் மனம் திறந்து நினைவாராக. கணவன் மனைவி மகள் மகன் என்னும் ஒரு சிறு குடும்ப உறுப்பினர் தாமும், எதுவும் மனந்திறந்து பேசி, மனந்திறந்து செயலாற்றி வாழும் வாழ்வைக் காண்கிறோமா? அவ்வாறு ஆயின், இல்லறத்தின் அடிப்படையே தகர்ந்து போய்விடுகின்றது அல்லவா! உலகளாவிய ஒரு நிலைக்கு வளர்வதற்குரிய பயிற்சி நிலையமாகிய இல்லளவிலேயே, அளவாளவுதல் இல்லை என்றால் முடிவு வெற்றி முயற் கொம்புதானே! இந்நிலைதான் இந்நாட்டையும் உலகையும் அழிக்கிறது!
தாய் தந்தையொடும், தந்தை தாயொடும், மக்கள் பெற்றோரொடும், பெற்றோர் மக்களொடும் அளவளாவுதல் இன்பத்தை விரும்புகிறார் வள்ளுவர்.
உணவு உண்ணும் போதும் உடனிருந்து உண்ண ஏவுகிறார். ஒருவர்க்கு ஒருவர் படைத்து உவப்புடன் உண்ண ஏவுகிறார். அப்பயிற்சி குழந்தைகளுக்கே கல்லாக் கல்வியாக நாளும் பொழுதும் வருவதால் அக்குழந்தையும் அளவளாவத் தெரிந்து கொள்கிறது.
அளவளாவித் தன் பெற்றோரையும் உடன்பிறந்தாரையும் மகிழ்விக்கவும் தெரிந்து கொள்கிறது. "கண்டது கற்றல்; கேட்டது