திருக்குறள் ஆராய்ச்சி
―
1
97
ஆதலால், “வறியன்” என்பதனினும் ‘அறிவில்லான்’ என்பதே அவன் பழிக்கும். அவன் குடிப்பழிக்கும் உரியது. அவ்வாறாயின், அவ்வறுமையினும் கொடியது அறிவில்லாமையேயாம் எனத் தெளிந்தார். அதனால்,
66
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு
99
(841)
என்றார். தம் பொருளாகிய மக்களுக்குப் பெற்றோர் தரும் பொருளாவது, ‘அறிவே' என்பது வள்ளுவமுடிபாம்.
பழியின்மை
நெஞ்சிலக்கணம் அறியாதவன் பஞ்சிலக்கணம் படித் தென்ன? அஞ்சிலக்கணம் படித்துத்தான் என்ன? அறிவறிந்த மக்கள் பண்பறிந்த-பழியறியா-மக்களாகவும் இருத்தல்
வேண்டும் எனத் தேர்ந்து கூறுகிறார். அது,
“எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்
என்பது.
(62)
பழிப்புக்கு இடமில்லாத பண்புடைய நல்ல மக்களை ஒரு பெற்றோர் பெற்று விட்டனர் என்றால், அந்நன் மக்கள் வழி வழியாக வருவாரும் பழியிலராக விளங்குவார்! ஆதலால் பழியற்ற மக்களைப் பெற்றவர் தம் வழி முறைக்கே பழிவராது பாதுகாப்பவர் என்று அவர்தம் பன்மடங்குப் பெருமையைப் பகர்கிறார்.
முன்னை ஒரு பிறப்பு என்ன? என்று அறிந்துள்ளார் எவர்? அவர் கூறட்டும்! பின்னே ஏழு பிறப்பைக் காணலாம்! 'வருகின்ற ஏழு தலைமுறையினர்' என்பது, அறிவொடு பொருந்தும் வழி மட்டுமன்று, இற்றை அறிவியலொடும் பொருந்தும் வழி. எழுமை எழு பிறப்பும் உள்ளுவர்' என்பதற்கும், பின்வரும் ‘ஏழு தலைமுறையினரும் நினைவர் என்பதே வாழ்வொடும் பொருந்திய செய்தியாம் (107).
திரட்டு
இங்குக் கூறியவற்றால், அறிவறிந்த நன் மக்கட்பேறே பேறுகளுள் சிறந்த பேறு என்பதும், அம்மக்களே பெற்றோர்க்கு