102
66
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்”
என்பதைப் பொழியத் தவறுவதே இல்லை!
அப்படியா?
‘என் மக்கள் என் கல்லறைக்கு வந்து மண்டியிட்டுக் கண்ணீர் வடித்துக் கொண்டு இங்கே உறங்குகின்றானே, அவன் வாய் எங்களை என்றும் திட்டியது இல்லை; அவன் கை எங்களை என்றும் அடித்ததில்லை' என்று கூறும்படியான தந்தையாகவே இறப்பேன்” என்றான் ஒருவன். அவன் இங்கர்சால்!
தந்தை வீட்டுக்கு வருகிறான். அவன் தலையில் இருந்த தொப்பியை நெடுங்கம்பு கொண்டு அவன் மக்கள் தட்டி வீழ்த்தினர். அப்பொழுது அந்த அன்புப் பிழம்பு, தன் மக்களை அருகணைத்து, “இனிய மக்களே இவ்விளையாட்டு உங்களுக்கும்
ன்பம்; எனக்கும் இன்பம். ஆனால் இந்த விளையாட்டை நீங்கள் வேறு எவரிடத்தேனும் காட்டினால் அவர்கள் என்னைப் போல் மகிழ மாட்டார்கள். உங்களை ள அடிப்பார்கள். நீங்கள் அழுவீர்கள். அதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. ஆதலால் இதனைப் பிறரிடம் செய்ய வேண்டா" என்கிறான். அவன் ஆபிரகாம் லிங்கன்!
குழந்தை மையைக் கையால் தொட்டது; அக் கையால் முகத்தைத் தேய்த்தது; முகத்தில் மைக்கறை! ‘என்ன அழகு என்று கண்ணாடியில் அழகு பார்த்தது! ‘என்ன அழகு?' என்று கன்னத்தில் அறை போட்டாள் தாய்! வீறிட்டு அழுதது குழந்தை!
66
‘அதோ முழுமதி! அதில் கறையில்லையா? அது அதன் குறையா? என்ன கொடுமை செய்து விட்டாய்” என்று உருகு கிறது அருள் உள்ளம்! ஆம் தாகூர் உள்ளம்!
குழந்தை உறங்குகிறது முத்தமிட்டும் எழுப்பலாம்! முதுகில் அறைந்தும் எழுப்பலாம்! எது இருவர்க்கும் இன்பம்? - இதனை எண்ணிப் பார்க்கலாமே!
முற்றத்தில் நிற்கிறது குழந்தை. முகம் வாடிப் போய் இருக்கிறது. தந்தை வருகிறார். 'என்னம்மா,' என நிலையுணர்ந்து கேட்கிறார். “அப்பா! ஒட்டடை அடித்தேன்! கம்பு பட்டுக் கண்ணாடி உடைந்து விட்டது!” என்கிறாள்.