உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

1

103

"கண்ணாடிச் சில் மேலே படவில்லையே! நல்ல வேளை! கண்ணாடி போனால் போகிறது; வேறு வாங்கிக் கொள்ளலாம். மேலே பட்டிருந்தால்தான் தொல்லை" என்ற உரை கேட்ட அளவில், முகம் மலராகி விட து. கண்ணாடி உடை வைக் கொண்டு கண்டித்திருந்தால் நெஞ்சவுடைவல்லவோ நேரும்! பின்னர் ஒட்டடை தட்ட எண்ணமாவது எழுமா?

இவை இடைக் குறிப்புச் செய்திகள்.

முந்தியிருத்தல்

கட

வக்

மக்களுக்குப் பெற்றோர் ஆற்ற வேண்டிய கடமை ஒன்றையும், அதன் பயனையும் காணலாம். அவை ஒவ்வொரு குறட் செய்திகள். ஆனால் விரிய, விரியும் விரிவுடையவை. நாம் ஓரளவால் காணலாம். முன்னது,

66

“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்”

என்பது

(67).

தந்தை என்றால் தந்தை மட்டும் தாமா? தாய் செய்தல் கூடாதா? ஏன் இருவருமே செய்யலாமே!

மகற்கு என்றால் மகளுக்குப் பொருந்தாதா? மகன், மகள் ஆகிய இருவருக்கும் உரியதுதானே!

அவை என்பது என்ன?

நாடக அரங்கும் அவைதான்! திரையரங்கும் அவை தான்! வட்டரங்கும் அவை தான்! இவை எல்லாம் பணத்தாள் தந்தவர் எவராயினும், முந்தியும் இருக்கலாம்! முன்னும் இருக்கலாம்! முதன்மையிலும் இருக்கலாம்!

காலை வைத்தலும் ஆகாது’ என்னும் சூதர் அவையும் உண்டே! இக்காலத்தில், ஏய்ப்பர் அவை எத்தனை? மேய்ப்பர் அவை எத்தனை? எவ் வவையில் முந்தியிருப்பச் செய்தல்?

முற்காலத்தே வேந்தர் அவை இருந்தது. புலவர் அவை இருந்தது; எண்பேராயம், ஐம்பெருங்குழு என்பன இருந்தன. வாரியங்கள், ஊராள் கணங்கள் என்பனவும் இருந்தன.

இக்காலத்தும் மதிப்புக்குரியவை எனப் பாராட்டப்படும்

அவைகளும் குழுக்களும் எத்தனையோ உள்ளனவே.