―
திருக்குறள் ஆராய்ச்சி 1
125
குறைந்த அளவு, ஆசிரியப் பணியைத் தேடு வார்க்கேனும் முதற் கட்ட ஆணையாக மேற்கொள்ளப் பட்டிருப்பினும் ஓரளவு தீர்ந்திருக்கும்.
னை ன
ஓராசிரியர் தாம் செய்ததோர் குற்றத்திற்குத் தண்ட யாகச், சிறைப் பட்டிருந்தார். அவர்க்குத் தந்த தண்டனை நினைவு கொள்ளத் தக்கது. “இவ்வளவு பேரைக் கல்வியறிவுடையவராகச் செய்துவிட்டால், உமக்கு விடுதலை” என்று ஆணை பிறப்பிக்கப் பட்டது. சிறைக் குள்ளிருந்த கல்வியறில்லாரைத் தேடினார்; கற்பித்தார்.
L
சிறையின் போதும் தம் கல்வித் தொண்டு ஆற்ற அவர்க்கு வாய்த்தது. அது நாட்டுத் தொண்டும் ஆகிவிட்டது. இத் தண்டனை தந்தவர் நபிகள் நாயகம். வினையால் வினையாக்கிக் கொள்ளல் என்னும் வள்ளுவ விளக்கம் இதுதானே! இந் நாளில் உண்டாகியுள்ள பலப்பல குறைகளுக்கும் அடிப்படை, மெய்யான நல்ல வழிகாட்டி இல்லை என்பதும், வழிகாட்ட வல்லாரை அரசு கண்டு கொள்வது இல்லை என்பதுமேயாம். கேள்வி
கல்வி அறிவில்லா மாந்தர், மாந்தர் அல்லர் எனக் கண்ட வள்ளுவர், ஓரளவே கற்றுக் கொண்டு அதனை மேலும் வளர்த்துக் கொள்ளாமலும், நல்லறிவுச் செய்திகளைக் கேட்டுப் பெருக்கிக் கொள்ளாமலும் இருப்பாரையும் மக்கட் கூட்டிலே சேர்த்துக் கொள்ள விரும்பினார் அல்லர்.
வாய்ச்சுவை வாய்க்கும் டம் ம் இது, காலம் து எனத் தேடி உண்பவர். அதனினும் மேம்பட்டதும் ஒருகால் சுவைத்தால் வாழ்நாளெல்லாம் பயன்படுவதும் ஆகிய செவிச்சுவையைத் தேடிக் கொள்ளாமை எத்தகு பிழையுடையது. இத்தகையவர் வாழ்வும் அறிவுடையோர் மதிக்கும் வாழ்வாகுமா? என்கிறார்.
"செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்?
(420)
மக்கள் என்னாமல் மாக்கள் (விலங்குகள்) எனக் கால் சேர்த்தது நாலு கால்களையுடைய விலங்கு என்பதற்காகவா? மாடு, ஆடு என்பவை என்ன, புலி, கரடி என்பவை என்ன, அவை வாய்ச்சுவையாகிய உணவை மட்டும்தானே குறிக்கோளாகக் கொண்டு சுவைப்பவை! அவற்றைப் போல அச்சுவையே சுவை யாய் வாழ்வார் அத்தகையர் தாமே என்க.