126
பதர்
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
கற்பார் ; நல்லவும் கேட்பார்; ஆயினும் பயனற்ற சொற் களைச் சொல்லிச் சொல்லியே திரிவார் உளர். அவர் காலக் கேடர்; பிறவிக்கேடர்! பயன்கேடர்; ஆதலால் நெற்பதர் போன்றவர். அவர்மட்டுமல்லர்; அவர் சொல்லைக் கேட்டும் ‘நன்று' என்று பாராட்டியும் திரிவாரும் அத்தகையரே.
“பயனில்சொல் பாராட்டு வாளை மகனெனல் மக்கட் பதடி எனல்”
இனச் சார்பு
(196)
நன்மகன் ஒருவன் நன்மகனாகவே இருக்க வேண்டும் என்றால், நன்மக்கள் தொடர்புடையவனாக இருத்தல் வேண்டும்! தீயமக்கள் தொடர்பு உண்டாகி ாகி விடுமானால் தன்னைக் காத்துக் கொள்ளும் உச்சமான உறுதி நிலை பெற்றிருந்தால் ஒழியத் தீமையில் இருந்து தப்பவே முடியாது.
66
எறும்பு ஊறிக் கல்லும் தேயும்” என்பது பழமொழி. அவ்வாறே பழகிப் பழகிப் தீய கூட்டினால் நல்லுள்ளமும் கெட்டுப் போகும். ஆதலால் தீயாரைக் காண்பதுவும் தீதே; தீயார் சொல் கேட்பதுவும் தீதே; தீயார் குணங்கள் உரைப்பது வும் தீதே; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீதே; என்னும் அறிவுரை உண்டாயிற்று.
"கொம்புளதற்கு ஐந்து முழம் விலகு; குதிரைக்கும் பத்து முழம் விலகு; கொடிய யானைக்கு ஆயிரம் முழம் விலகு; தீயோர்க்கோ கண்ணில் எட்டாத் தொலைவுக்கு விலகி விடு என்றும் கூறினர்.
மேலும் கூறுவாராய் "ஈக்கு நஞ்சு தலையில்; பாம்புக்கு நஞ்சு பல்லில்; தேளுக்கு நஞ்சு கொடுக்கில்; தீயோருக்கோ நஞ்சு உடல் முழுவதும்” என்றனர்.
ஆனால்
அவ்வாறானால், “தீயோரைத் திருத்தி நல்லோர் ஆக்குவார் எவர்? எல்லாரும் ஒதுங்கி விட்டால் தீயோர் முழுத் தீயோராகத் தாமே காலமெல்லாம் திரிவார். நோயுள்ளவர்களுக்குத் தானே மருத்துவர் உதவி வேண்டும்” என வினாவலாம்.
அவரைத் திருத்துவார்க்கு வேண்டும் அடிப்படைத் தகுதி, “எவரைத் திருத்த நினைக்கிறாரோ, அவர் நம்மை அவர் வழிக்குத் திருப்பி விட முடியாத உறுதிப்பாடு நமக்கு உண்டு