66
திருக்குறள் ஆராய்ச்சி - 1
'சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
159
(267)
உள்ளத்தை ஒருப்படுத்தும் ஆற்றலை உடைய தவத் தினர்க்கு இறப்பச்சம் என்பதொன்று என்பதொன்று இல்லை! கூற்றம் என்பதுவும் அவர்க்கு முன் நிற்க முடியாமல் தோற்றுப் போகும்.
66
'கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு
وو
(269)
"கொடியில் இருந்து உதிரும் பூப்போல உடலில் இருந்து உயிர் பிரிதல் வேண்டும்" என்பார் தாகூர். அவரே “மணவாளன் கழுத்தில் மாலை சூட்டி அவன் கையைப் பற்றிக் கொண்டு செல்லக் காத்திருக்கும் மணமகள் போல் யான் காத்திருக்கிறேன்; இன்னும் வராமல் கூற்றுவனே நீ காலம் கடத்துவது என்ன?” என வினவுகின்றார்.
ய
102 அகவை வாழ்ந்த பெருமகனார் விசுவேசுவரரை, “தங்கள் நெடிய வாழ்வுக்குக் காரணமென்ன?" என ஒருவர் வினாவினார். அவர் “இரண்டு மூன்று முறை என்னை அழைப்ப தற்காக வந்து, காலன் என் கதவைத் தட்டினான்; அப் பொழுதெல்லாம், நான் கருத்தாக வேலையில் ஈடு பட்டிருந் தமையால் வேலை செய்பவனுக்கு இடைஞ்சல் செய்தல் கூடாது எனப் போய்விட்டான்” என்று மறுமொழி தந்தார். கடமைகளைத் தலை மேல் அள்ளிப் போட்டுக் கொண்டு அதே கருத்தாக இருப்பவர் நெடிது வாழ்வர் என்னும் அரிய நுட்பத்தை அவர் தம் கூர்த்த மூளையால் கண்டு வழங்கியுள்ளார் என்க. இத்தகு பெருமக்களுக்கு இறப்பு என்பது களிப்பேயன்றிக் கவலைப் பொருள் ஆகாதாம்.
கூடா ஒழுக்கம்
க
துறவர் கொள்ளக் கூடாத ஒழுக்கங்கள் எவையோ அவை கூடா ஒழுக்கங்களாம். "தெரியாமல் செய்து விட்டேன்” என்று தப்பக் கூடியவர்கள் அல்லரே துறவர்!
று
கூடா ஒழுக்கத்தவர் கொள்ளும் தவக்கோலத் தோற்றமும் அவக்கோலச் செய்கையும் விளக்க ஒன்றற்கு நான்கு உவமை களைக் காட்டுகிறார் வள்ளுவர். அவை:-
தவவலிமை இல்லாதவன் தவத்தினர்க்குரிய உயர்ந்த கோலங்களைக் கொண்டிருப்பது, வலிமை இல்லாத பசு வலிய