உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம் 6

புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு அச்சமில்லாமல் அயலார் பயிரை மேய்வது போன்றது! ('புலி புல்லைத் தின்னாது' என்னும் எண்ணம் நல்ல பாதுகாப்பு அல்லவா!) (373)

தவவேடத்தில் மறைந்து கொண்டு அத் தவத்திற்கு மாறான தீய செயல்களை ஒருவன் செய்வது, புதர்க் காட்டில் மறைந்து கொண்டு (தன்சூழ்ச்சியையும் மறைத்துக் கொண்டு) வேடன் பறவைகளைப் பிடிப்பது போன்றது. (274)

வெளிக் கோலங்களால் செம்மையை வெளிப்படக் கொண்டு, உள்ளே வஞ்சத்தை வைத்திருக்கும் தவ வேடத்தினர், உடலெல்லாம் சிவப்பும் மூக்கில் கறுப்பும் கொண்டுள்ள குன்றிமணி போன்றவர். (276)

66

“மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து”

என்பது சேக்கிழார் காட்டும் முத்தநாதன் உள்ளகம்.

அம்பு நேரானது. யாழ் வளைவானது. அம்பு நேராக இருத்தலால் அதன் செயற்பாடும் நேராயிற்றோ? யாழ் வளைவாக இருத்தலால் அதன் செயற்பாடும் தீயது ஆயிற்றோ? இல்லையே! அவற்றின் செயலைக் கொண்டு தானே நன்மை தீமை எனத் தீர்மானிக்கிறோம். அது போல் தவத்தினரையும் அவரவர் செயற்பாடு கொண்டே தீர்மானித்தல் வேண்டும்.

இவை கூடா ஒழுக்கத்தில் வள்ளுவர் காட்டிய நான்கு உவமைச் செய்திகள்.

வஞ்சமின்மை, நெஞ்சறிந்து குற்றம் செய்யாமை, மனத் துறவு என்பவற்றை ஒருவர் கொண்டிருப்பாரேயானால் அவர் தம்முடியை மழித்துக் கொண்டால் தான் என்ன, அன்றி நீட்டி வளர்த்துக் கொண்டால் தான் என்ன? அம்முடியிலேயோ துறவு உள்ளது? என்பாராய்,

“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்”

என்கிறார் (280).

கள்ளாமை

(களவு செய்ய நினையாமை)