கல்வி
1. நல்ல மாணவராக!
பழந்தமிழகத்தில், கல்வி மக்கள் அனைவருக்கும் உரிய பொதுப் பொருளாக இருந்தது. ஆண் பெண் என்னும் இரு பாலாருக்கும் கல்வி தரப்பட்டது. உழவர், மருத்துவர், வணிகர், கொல்லர், தச்சர், நெசவர், குயவர், அரசர், அமைச்சர், படையர் ஆகிய அனைவருக்கும் கல்வி தரப்பட்டது. சங்கப் புலவர்களின் பெயர்களை மேலோட்டமாகப் பார்ப்பவர்களும் இவ்வுண் மையை நன்கு அறிவர்.
மூல அலகு
குடும்பம் என்னும் ‘மூல அலகு' கொண்டு ஆய்ந்தவர் திருவள்ளுவர். அக்குடும்ப அலகு, படிப்படியே விரிந்து உலக மாகிச் சிறக்க வழிகாட்டியவர் அவர். அதனால், குடும்ப அலகின் முளையாகிய ‘மக்கட் பேற்றைப் பற்றிக் கூறத் தொடங்கும் போதே, 'அறிவறிந்த மக்கட் பேற்றையே பேறு' என்றும் 'மற்றவை பேறல்ல' என்றும் வரையறுக்கிறார். (61). அலை வட்டம்
நீர் நிலையில் ஒரு பழம் விழுந்தால் எவ்வாறு சிறிய ‘அலை வட்டம்' எழுந்து, பின் அவ்வலை வட்டம் பெரிது பெரிதாக விரிந்து, நீர் நிலையை வளைத்துக் கொள்கிறதோ அப்படியே குடும்பத்தின் அறிவறிந்த மக்கட் பேறு. உலகளாவிய பேறாகத் திகழ வேண்டும் எனத் தெளிந்தார். அதுவே, உலகைக் காக்கும் உயர்நெறி எனக் கொண்டார்,
'ஒரு குடும்பத்தில் நல்ல மகவொன்று பிறத்தலால் அக் குடும்பமும் அக்குடும்பம் சார்ந்தவரும் பெறும் நலங்களினும், உலகம் பெறும் நலம் பெரிதாகும்' என்பது வள்ளுவர் கணிப்பு. (68).
உலக நிலைபேறு
வள்ளுவர் பிறந்ததால் ஈராயிரம் ஆண்டுகள் கழித்தும் நாம் அடைந்து வரும் நன்மை எவ்வளவு? உலகம் அடையும்