உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி - 1

163

பாராட்டுவார். ஏனெனில் தம் வாழ்வையே 'வாய்மையின் ஆய்' ஆகவே கொண்டவர் அல்லரோ அடிகள்!

காந்தியடிகள் பொய் கூறுதலை மலச்சிக்கலுக்கு ஒப் பிட்டுச் சொல்கிறார். மலச்சிக்கலே பலப்பல நோய்களுக்கும் மூலம். அதுபோல் “பலப்பல தீமைகளுக்கும் மூலம் பொய் கூறுதலே" என்பார்.

ஒளிசெய்யும் விளக்குகளில் எல்லாம் உயர்விளக்கு பொய்யாமை ஆகிய விளக்கே என்னும் வள்ளுவர்,

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற”

என்பார் (300).

வெகுளாமை

"உண்மை கசப்பானது; எவரும் ஏற்றுக் கொள்வது எளிது அன்று” என்பர். உண்மை கசப்பானாலும் மருந்து போல் நன்மை செய்வதேயாகும்.

உண்மை பேசுவார் அத்தன்மை இல்லாரை மதியார் என்றும், அவர்மேல் சினம் கொள்வர் என்றும்; சினம் இருக்கும் டத்தில்தான் சிறப்பும் இருக்கும் என்றும் உலகோர் கூறுவர். மெய்யாகக் கூறினால், கூறினால், உண்மை உண்மை இருப்பவனுக்குச் சினம் இருத்தல் ஆகாது என்பதே.

சினம் என்பது சீற்றம் அன்று; வெகுளியும் அன்று; ருத்திரமும் அன்று; உள்வெதுப்ப நிறைவே சினம். அதனையும் கூட ‘ஆறுவது சினம்' என்றார் ஔவையார்.

"மன அடக்கம் பெற்றவன் சினமடங்கப் பெறவில்லை என்றால், அவன் பெற்ற மன அடக்கம், அடக்கம்” அன்று என்பதே பொருள்.

சினங்கொள்பவன் தன் கடுகடுப்பையும் துடிப்பையும் படபடப்பையும் கண்ணாடி முன் நின்று ஒருமுறை காண வேண்டும். "இவ்விழிந்த தோற்றம் உண்டாகுமா நாம் சீறும் போது” என உணர்ந்து நலம் பெறக்கூடும்.

சினத்தை வள்ளுவர் அருமையாக ஒரு பெயரிட்டு வழங்கி னார். அது, 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பது. சேர்ந்தாரைக்