162
வாய்மை
இளங்குமரனார் தமிழ்வளம் 6
―
உள்ளது உள்ளவாறு கூறுதல்' வாய்மை என்பார் உளர். ஆனால் வள்ளுவ நெஞ்சம் வாழ்வியல் நலம் கருதி அதற்குப் ஆ புத்திலக்கணம் காண்கிறது.
“வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் எவ்வுயிருக்கும் யாதொரு தீமையும் உண்டாகாத சொல்லைச் சொல்லுதல் என்பது அது (291)
மேலும் இதன் தொடர்பாக ஒரு விலக்குரையும் வழங்கினார். பிறர் நலம் கருதுவதாய், தன்னலம் கருதாததாய் இருக்குமானால் பொய்யும் கூறலாம். அது பொய் கூறுதல் ஆகாது. ஏனெனில், மெய்மை தரும் நன்மை எதுவோ, அதனை அப்பொய்மை தருவதால்! அதற்காக அப்பொய்யை மெய்யென்று கூறிவிடக் கூடாது. அப்பொழுதில் மட்டும் மெய்மையின் இடத்தில் அப்பொய் வைக்கப்படும்; அவ்வளவே என்கிறார்.
இவ்வாய்மைப் பொருள் விளக்கக் குறள்கள்:- “வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்”
“பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்'
OTTLIGT (291, 292).
துறவோர் புறந்தூய்மையும் கொள்வர்; அகந்தூய்மையும் காள்வர். கூடா ஒழுக்கப் போலித் துறவியரும் தூய துறவியர் போல் நீராடுவர் என்பதை 'மாண்டார் நீராடி' என்பார் வள்ளுவர் (278). தூய துறவோர் அகத்தும் புறத்தும் தூயராய் அமைதலை.
"புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்
என்கிறார்.
(298)
தவத்தொடு தானம் செய்தால்கூட, மனத்தொடு வாய்மை மொழிதலுக்கு இணையாகாது என்றும், உள்ளொத்த நெஞ்சத் தால் வாய்மை உரைத்து வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் உறைவார் என்றும் கூறுவார். அறிஞர் மு. வ. இக் குறளுக்கு உலகம் ஒப்பும் ஒரு சான்று காந்தியடிகள் என்று