விரிப்பு விளக்கம்
திருக்குறள் ஆராய்ச்சி
―
1
181
கறைபடாச் சுவரில் வண்ணவோவியம் தீட்டின் பளிச் செனத் தோன்றும். ஆனால், காலம் காலமாகக் கறையாக்கி எண்ணெய்ப் பிசிறும் ஆக்கி வைக்கப்பட்ட சுவரில், வண்ண ஓவியம் எத்தகு வனப்பாகத் தீட்டினாலும் எடுபடாது! முதற்கண் அச் செறி அழுக்கை அறவே போக்கும் முதற் கட்டப்பணியை முடித்தே, வரை பணியைத் தொடங்க முடியும். அவ்வாறே காலம் காலமாகக் கறையாக்கப்பட்டு வந்துள்ள ஊழ் வினைப் பசையைப் போக்கி வள்ளுவ ஊழை வகுத்துக் காட்ட இத் துணை முதற்கட்டப் பணிகள் வேண்டியுள்ளனவாம். இனி னி வள்ளுவர் காட்டியுள்ள ஊழைப் பற்றிக் காணலாம்.
ஊழ்த்தல்
வள்ளுவர்
ஊழ்த்தும்' என்னும் சொல்லைச் சொல் வன்மையில் பயன்படுத்துகிறார். மணமுடைய பூக்கள் முகையாக இருக்கும் போதே அவற்றுக்கு அம்முகையுள்ளும் மணமுண்டு என்பதைக் காமத்துப்பால் குறிப்பறிவுறுத்தலில்,
"முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு"
(1274)
என உவமைப்படுத்துகிறார். அது மணப்பூ. சொல் வன்மையில் சுட்டும் பூவோ, மணமிலாப்பூ. கற்றிருந்தும் கற்றதைப் பிறர் உணர விரித்துரைக்க மாட்டாதான், முகை விரிந்தும் மணவாத பூப்போல்வான் என்கிறார். அது,
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்”
(650)
என்பது. இங்கே வந்துள்ள ஊழ்த்தலுக்கு ‘மலர்தல்' பொருள் உண்மை அறியத் தக்கது.
ஊ
ஊழி
ஊழி' என்னும்
ஊழ் என்பதுடன் தொடர்புடைய சொல்லையும் வள்ளுவர் ஓரிடத்துப் பயன்படுத்தியுள்ளார்.
“ஊழிபெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்”
(989)
என்பது அது. அதற்குப் பரிமேலழகர் சால்புடைமை ஆகிய கடற்குக் கரை என்று சொல்லப் படுவார், ஏனைக் கடலும்